நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

30 ஆண்டு தனிமை.. திடீரென 7 முட்டைகளை போட்ட பெண் மலைப்பாம்பு.. எப்படி சாத்தியம்.. அதிகாரிகள் குழப்பம்

ஆண் துணை இல்லாமல் மலைப்பாம்பு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகளாக ஆண் துணை இல்லாமல் வாழ்ந்து வரும் பெண் மலைப்பாம்பு ஒன்று ஏழு முட்டைகளையிட்டு அனைவரையும் அதிசயிக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இருக்கிறது செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் 62 வயதாகும் மலைப்பாம்பு ஒன்று வாழ்ந்து வருகிறது. இது ராயல் பைத்தான் எனும் அரிய வகையைச் சேர்ந்த மலைப்பாம்பாகும். இதனை பால் பைத்தான் என்றும் அழைப்பர்.

இந்த மலைப்பாம்பு கடந்த 15 ஆண்டுகளாக ஆண் துணையே இல்லாமல் தனியாகத் தான் செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மலைப்பாம்பு ஏழு முட்டைகளையிட்டது. இது உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்

இப்படியும் இருக்கலாம்

இப்படியும் இருக்கலாம்

"பெண் மலைப்பாம்புகள் சில சமயங்களில் விந்தணுக்களை தங்களுடைய உடலில் சேகரித்து வைத்திருக்கும். பல ஆண்டுகளாக ஆண் துணையுடன் இணை சேராத சமயத்தில் அந்த விந்தணுக்களை பயன்படுத்தி முட்டையிடும். அதுபோல் போல் இந்த மலைப்பாம்பு முட்டையிட்டிருக்க வேண்டும்", என்கிறார் செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்கா நிர்வாகி மார்க் வார்னர்.

30 ஆண்டுகளா?

30 ஆண்டுகளா?

மேலும், "எங்களுக்குத் தெரிந்தவரை இந்த மலைப்பாம்பு கடந்த 15 வருடங்களாக ஆண் துணை இல்லாமல் இருக்கிறது. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஆண் துணை இல்லாமல் இருப்பதாக மூத்த ஊழியர்கள் சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது இந்த பாம்பு ஏழு முட்டைகளை போட்டிருக்கிறது. அதில் இரண்டு ஏற்கனவே வீணாகிவிட்டது. மற்ற ஐந்து முட்டைகளை இங்குபேட்டரில் வைத்து பராமரித்து கொண்டிருக்கிறோம். விரைவில் அவை குஞ்சு பொறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஆய்வு

தொடர்ந்து ஆய்வு

முட்டைகளை ஆய்வு செய்து வருகிறோம். உண்மையில் அந்த பாம்பு ஆண் துணை இல்லாமல் தான் முட்டையிட்டதா? அல்லது பாலுறவு மூலம் தான் முட்டையிட்டதா? என்பது ஆய்வு முடிவில் தெரியவரும். இப்போதைய நிலையில் அது பாலுறவு இன்றியே முட்டையிட்டிருப்பதாக தெரிகிறது", என்கிறார் மார்க் வார்ணர்.

English summary
A 62 year old ball python at Saint Louis Zoo in the US state of Missouri had laid seven eggs two months ago despite not being around a male python in over a decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X