நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதி மீறிட்டாங்க.. பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! பாய்ந்து வரும் சீனா.. விழுந்த "பார்ட்ஸ்" எங்கே?

இது மிகவும் தவறான நடவடிக்கை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் பலூனை அந்த நாட்டு கடற்படை இன்று கைப்பற்ற உள்ளது. இதற்காக கடற்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர்.

Recommended Video

    China VS USA | China Spy Balloon-ஐ சுட்டு வீழ்த்திய America...கொந்தளிக்கும் China

    அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது.

    முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன.

    லடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற ரிப்போர்ட்!லடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற ரிப்போர்ட்!

    குழப்பம்

    குழப்பம்

    இந்த பலூன்கள் எதனால் பறக்கிறது என்ற குழப்பம் நிலவியது. அதன்பின்தான் பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கை அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தன. அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது.

    பலூன்

    பலூன்

    இந்த பலூன் எங்களுடைய பலூன் கிடையாது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைகக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். முக்கியமாக இது உளவு கருவி எதையும் கொண்டு இருக்கவில்லை. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக சென்றுவிட்டது. அதீத காற்று காரணமாக அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக நுழைந்துவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது.

    பிரஷர்

    பிரஷர்

    இந்த பலூன் காரணமாக அமெரிக்க அதிபருக்கு பிரஷர் அதிகரித்தது. இதை உடனே சுட்டு வீழ்த்த வேண்டும். சீனாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனால் இதை சுட்டு வீழ்த்த வேண்டிய கட்டாயம் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டது. ஆனால் அப்போது இந்த பலூன் மக்கள் இருக்கும் பகுதிக்கு மேலே பறந்தது. அதனால் இந்த பலூனை சுட முடியவில்லை. இதையடுத்து அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானமன் எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின.

    சுட்டது

    சுட்டது

    கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்க சென்றுள்ளது. பெரிய கிரேன் கொண்ட மீட்பு கப்பல்கள் இந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை செய்ய உள்ளது. இந்த பலூன் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை வேவு பார்த்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

    சீனா விமர்சனம்

    சீனா விமர்சனம்

    இந்த பாகங்கள் ஆழமான கடலில் விழவில்லை. 14 மீட்டர் ஆழம் இருக்கும் கடல் பகுதியில்தான் விழுந்து உள்ளது. அதனால் இதை எளிதாக மீட்க முடியும். இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது மிகவும் தவறான நடவடிக்கை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

    English summary
    Chinese condemns after its balloon shot down by US Airforce early in the morning .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X