நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதிக்க வேண்டும்.. அமெரிக்க அரசு அதிரடி அறிக்கை!

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுக்க பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே என்று பெரு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு அறிக்கை

அரசு அறிக்கை

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இதில் ஏற்படும் மாற்றம் கூர்மையாக கவனித்து வருகிறோம்.மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும். மக்கள் அமைதியாக ஒன்று கூடுவதற்கு உரிமை உள்ளது.

ஆனால் மக்கள்

ஆனால் மக்கள்

ஆனால் மக்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட கூடாது. கலவரம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் மத சுதந்திரத்தை அரசு மதித்து நடக்க வேண்டும்.அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ஜனநாயக நாடுகள்.

சமமாக நடத்தப்பட வேண்டும்

சமமாக நடத்தப்பட வேண்டும்

இந்தியாவில் மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசு சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு காக்க வேண்டும்.

உரிமை முக்கியம்

உரிமை முக்கியம்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவர்களின் உரிமையை காக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது.

English summary
Citizenship Amendment Protest: India should protect the rights of its religious minorities says US state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X