80 வருடங்களில் நடக்காத அவலம்.. ப்ளீஸ் உதவுங்கள்! அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கலங்கிய உக்ரைன் அதிபர்!
நியூயார்க்: உக்ரைன் - ரஷ்ய போருக்கு இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வீடியோ மூலம் உரை நிகழ்த்தினார். சோவியத் யூனியன் உடைந்த பின் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 3வது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
1941ல் யு.கே பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பேசியது எப்படி உலக அளவில் கவனிக்கப்பட்டதோ அதற்கு இணையாக இன்று செலன்ஸ்கி பேச்சும் கவனிக்கப்பட்டது. சபாநாயகர் நான்சி இன்று அவையில் செலன்ஸ்கியை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆன்லைன் மூலம் செலன்ஸ்கி திரையில் தோன்றினார். அப்போது இரண்டு கட்சி உறுப்பினர்களும் அவையில் செலன்ஸ்கிக்கு ஆதரவாக கைதட்டி, உக்ரைன் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர்.

செலன்ஸ்கி உரை
இவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உரையை தொடங்கிய செலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து உங்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி. இப்போதும் கூட.. இந்த நொடியும் கூட உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் ரஷ்யா முன் மண்டியிடாது. நாங்கள் எந்த காலத்திலும் எங்கள் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை பற்றி ஒரு நொடி கூட நாங்கள் யோசிக்க மாட்டோம்.

உக்ரைன் ரஷ்யா
இப்போது உக்ரைனில் நடப்பது ஐரோப்பா கண்டிராத ஒரு தாக்குதல். கடந்த 80 வருடங்களில் ஐரோப்பா கண்டிராத மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் கண்டு வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட பேர்ல் ஹார்பர் தாக்குதல் நினைவு இருக்கிறதா.. டிசம்பர் 7, 1941ல் நடத்தப்பட்ட அந்த தாக்குதல் இரண்டாம் உலகப்போரின் திசையை மாற்றியது. உங்கள் நாட்டின் வானம் அன்று விமான தாக்குதல்களால் கருப்பாக மாறியது.

911 அட்டாக்
2001 செப்டம்பர் 11ம் தேதி அல் கொய்தா நடத்திய இரட்டை கோபுர தாக்குதல் நினைவு இருக்கிறதா. அங்கு உங்கள் நாட்டில் சாலைகள் கருப்பாக மாறியது. மக்களின் ஓலம் சாலைகளில் கேட்டது. அப்படிப்பட்ட அவலத்தைதான் நாங்கள் இப்போது தினம் தினம் எதிர்கொண்டு வருகிறோம். எனக்கு ஒரு கனவு இருக்கிறது.. இது உங்கள் நாட்டு தலைவர் மார்ட்டின் லூதர் கிங் சொன்னது.

என் கனவு
எனக்கு அப்படி ஒரு கனவு, ஆசை இருக்கிறது. என் நாட்டை காக்க வேண்டும். என் நாட்டு வானத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு எனக்கு உங்களுடைய உதவி தேவை. உங்களுடைய நட்பு தேவை. எங்கள் நாட்டு வான் பகுதியை நீங்கள் மூட வேண்டும். அங்கு விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த போர் முடிவிற்கு வரும். அமெரிக்க அதிபர் பிடன்.. சர்வதேச தலைவர்.

வானத்தை தடை செய்யுங்கள்
அவர் சர்வதேச அமைதிக்கான தலைவராக இருக்க வேண்டும். உக்ரைன் மக்களை காக்க வேண்டும் என்று வான் பகுதியை தடை செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். அது பேராசையா? நான் அதிகம் எதுவும் கேட்கவில்லை.. எங்களை காப்பாற்றும்படிதானே கேட்கிறேன். அப்படி செய்தாலே எங்கள் நாடு மீதான தாக்குதல்கள் நிற்கும். எங்கள் மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

இது பேராசையா?
ஒருவேளை நான் கேட்பது பேராசை என்றால் இன்னொரு வழியும் இருக்கிறது. விமானங்களை தாக்கி அழிக்கும், ஏவுகணைகளை வழி மறித்து தாக்கும் ஆயுதங்களை கொடுக்கும். எங்களுக்கு எஸ் 400 வகை ஏவுகணை மறுப்பு ஆயுதங்களையும், மற்ற ஏவுகணைகளையும், நவீன போர் விமானங்களையும் கொடுங்கள். எங்கள் நாட்டை நாங்கள் காக்க வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்.. எங்கள் நாடு இருண்ட காலத்தில் இருந்து வெளியேற உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications