கொரோனா.. உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 4,325,692 ஆக உயர்வு.. அமெரிக்காவில் மீண்டும் 1 லட்சம் கேஸ்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக இதுவரை 204,722,966 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுக்க 4,325,692 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் அதிகரித்து வருகிறது. அதிலும் வேக்சின் அதிகம் போடப்பட்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 183,855,131 பேர் உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 605,231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16,542,143 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை 36,891,931 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் அங்கு தினசரி கேஸ்கள் மீண்டும் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 100,970 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 634,662 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் வேக்சின் போடும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு ஹெர்ட் இம்மியூனிட்டியை அடையும் அளவிற்கு அங்கு 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேக்சின் போடப்பட்டுவிட்டது. ஆனாலும் இன்னும் அங்கு கேஸ்கள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தப்படியே இருக்கிறது. புதிய வகை உருமாறிய கொரோனா காரணமாக அங்கு கேஸ்கள் அதிகரிக்கலாம். அமெரிக்காவில் தற்போது 6,291,119 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இன்னும் கொரோனா கேஸ்கள் முழுமையாக கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. இந்தியாவில் 32,033,333 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 429,183 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 468 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தினசரி கேஸ்கள் குறையவில்லை என்றாலும் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில் இன்னும் மூன்றாம் அலை தீவிரம் எடுக்கவில்லை. இந்தியாவில் 31,210,624 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இதனால் தற்போது 393,526 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 37,241 பேர் புதிதாக இந்தியாவில் குணமடைந்து உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் இன்னும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. முதல் அலையில் இருந்தே உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில் முக்கியமான நாடாக உள்ளது. பிரேசிலில் வேக்சின் விநியோகம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதன் காரணமாக அங்கு தினசரி கேஸ்களும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20,213,388 பேர் பிரேசிலில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 35,245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் கேஸ்கள் பிரேசிலில் மீண்டும் அதிகரித்துள்ளது. பிரேசிலில் பலி எண்ணிக்கை 564,890 ஆக உள்ளது. அங்கு புதிதாக 1,183 பேர் பலியாகி உள்ளனர். 19,022,724 பேர் பிரேசிலில் இதுவரை குணமாகி உள்ளனர். பிரேசிலில் தற்போது 625,774 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

 ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவிலும் கொரோனா கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கேஸ்கள் தொடர்ந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 21,378 பேர் ரஷ்யாவில் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 6,491,288 பேர் ரஷ்யாவில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 166,442 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 5,788,710 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 536,136 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். ரஸ்யாவில் தினசரி டிஸ்சார்ஜ் மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 18,729 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்சில் இதுவரை 6,339,509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சிலும் பிரேசில் போலவே கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அங்கும் மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,576 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 112,356 பேர் பிரான்சில் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 5,799,313 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். பிரான்சில் 21,471 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தற்போது 427,840 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China
     புதிய கேஸ்கள்

    புதிய கேஸ்கள்

    புதிய கேஸ்களில் அடிப்படையில் அமெரிக்காதான் 1 லட்சம் கேஸ்களோடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து ஈரானில் 4 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகி வருகிறது. ஈரானில் 39,139 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 552,252 ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அதேபோல் இந்தோனேசியாவில் 32,081 பேர் கொரோனா காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிகமாக 437,055 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல் துருக்கியில் 26,597 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 389,757 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+