நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கை.. ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் தருகிறது.. அமெரிக்க கொரோனா சோதனையில் முடிவு.. கேம் சேஞ்சர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரசுக்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் அளிக்கிறது, இந்த மருந்து பெரிய வகையில் நம்பிக்கை தருகிறது என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (The US National Institute of Allergy and Infectious Diseases -NIAID) தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரானா தடுப்பூசி போட்டு பார்க்கிறது அமெரிக்கா

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வருகிறது. கொரோனா இத்தனை வீரியமாக பரவ காரணம், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான். கொரோனாவை தற்போது மருந்து கொடுத்து நேரடியாக குணப்படுத்த முடியவில்லை.

    மாறாக அதன் பக்க விளைவுகளை குணப்படுத்தி, கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் எல்லாம் தீவிரமாக முயன்று வருகிறது.

    கலங்க வைத்த டிரேசிங்.. கோயம்பேடு சந்தையில் நிறைய கடைகளுக்கு பரவியது.. ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா! கலங்க வைத்த டிரேசிங்.. கோயம்பேடு சந்தையில் நிறைய கடைகளுக்கு பரவியது.. ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா!

    ரெமிடிஸ்வர் சோதனை

    ரெமிடிஸ்வர் சோதனை

    இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து சோதனை செய்யப்பட்டது. ஆனால் முதல் கட்ட சோதனையில் இந்த ரெமிடிஸ்வர் மருந்து தோல்வியை தழுவியது. கில்லட் சைன்ஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்து முதல் கட்ட சோதனையில் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த மருந்தை கொரோனா பாதித்த ஒருவருக்கு ஆரம்பித்திலேயே கொடுத்தால் பலன் அளிக்கும் என்று கில்லட் சைன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    மருந்து நல்ல பலன் அளிக்கிறது

    மருந்து நல்ல பலன் அளிக்கிறது

    இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் அளிக்கிறது, இந்த மருந்து பெரிய வகையில் நம்பிக்கை தருகிறது என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (The US National Institute of Allergy and Infectious Diseases -NIAID) தெரிவித்துள்ளது. அதில், ரெமிடிஸ்வர் மருந்துகளை பயன்படுத்தும் கொரோனா நோயாளிகள் வேகமாக குணம் அடைகிறார்கள். மற்ற நோயாளிகளை விட 31% வேகமாக இவர்கள் குணம் அடைகிறார்கள்.

    மருத்துவ சோதனைகள்

    மருத்துவ சோதனைகள்

    இதுவரை செய்யப்பட்ட மருத்துவ சோதனைகள் நல்ல பலன் அளிக்கிறது. இந்த மருந்து மிக சிறப்பான பயன்களை தர தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளிக்கும் ஒரே மருந்தாக ரெமிடிஸ்வர் மாறியள்ளது. கொரோனாவிற்காக மற்ற மருந்து எடுக்கும் நபர்கள் 15 நாட்களில் பொதுவாக குணம் அடைய வாய்ப்புள்ளது. ஆனால் கொரோனாவிற்காக ரெமிடிஸ்வர் மருந்து எடுக்கும் நபர்கள் 11 நாட்களில் குணம் அடைகிறார்கள்.

    100% பலன் அளிக்கவில்லை

    100% பலன் அளிக்கவில்லை

    ரெமிடிஸ்வர் மருந்து கொரோனாவிற்கு எதிரான வேகமான, நல்ல முன்னேற்றத்தை காண்பிக்க தொடங்கி உள்ளது . ஆனால் இந்த ரெமிடிஸ்வர் இன்னும் கொரோனாவிற்கு எதிராக 100% பலன் அளிக்கவில்லை. இந்த ரெமிடிஸ்வர் கொரோனாவை கட்டுப்படுத்துகிறது. அதன் வீரியத்தை தடுக்கிறது. அதேபோல் இந்த ரெமிடிஸ்வர் மருந்தை சாப்பிடும் நபர்கள்தான் குறைவாக மரணம் அடைகிறார்கள். ஆனால் இதன் விகிதம் குறைவாகவே உள்ளது. ரெமிடிஸ்வர் சாப்பிடும் நபர்களின் இறப்பு விகிதம் 8 சதவிகிதமாக உள்ளது.

    இறப்பு விகிதம் எப்படி

    இறப்பு விகிதம் எப்படி

    ரெமிடிஸ்வர் சாப்பிடாத நபர்களின் இறப்பு விகிதம் 11.6 சதவிகிதமாக உள்ளது. இந்த மருந்து கடந்த பிப்ரவரி 21ம் தேதியில் இருந்து 1063க்கும் அதிகமான நபர்களிடம் 68 இடங்களில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா என்று பல கண்டங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ரெமிடிஸ்வர் மருந்து கொரோனா வைரசின் ஆர்என்ஏவில் உள்ள நான்கு பிளாக் (block) போன்ற பகுதிகளில் ஒன்றுக்குள் நுழையும் திறன் கொண்டது .

    பிளாக் போன்ற பகுதி

    பிளாக் போன்ற பகுதி

    அந்த பிளாக் போன்ற பகுதிக்குள் நுழைந்து அந்த பிளாக் போலவே இந்த மருந்து வேடமிட்டு, அந்த வைரஸின் ஜீனோம் பகுதிக்குள் இந்த ரெமிடிஸ்வர் செல்லும். அதன்பின் அந்த வைரஸின் வேடமிடம் திறனை இந்த ரெமிடிஸ்வர் அழித்து அதன் செயல் திறனை மட்டுப்படுத்தும். கொரோனா வைரஸ் மனித உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்கள் போல வேடம் அணிந்து நமது உடலை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வைரஸின் இந்த திறனைத்தான் ரெமிடிஸ்வர் காலி செய்கிறது.

    நம்பிக்கை அளிக்கிறது

    நம்பிக்கை அளிக்கிறது

    ரெமிடிஸ்வர் சோதனை இப்போது நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளதால் இதன் சோதனையை மேலும் அதிகரித்து விரைவில் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது, கில்லட் நிறுவனத்தின் இந்த மருந்து சார்ஸ் மற்றும் மெர்ஸ் நோய்களுக்கு எதிராக சோதனை செய்யப்பட்டது. அப்போது விலங்குகள் மீது செய்யப்பட சோதனையில் இது பெரிய அளவில் பலன் அளித்தது.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    ஆனால் இந்த ரெமிடிஸ்வர் சோதனை இன்னும் பலருக்கு செய்யப்பட வேண்டும். இப்போது செய்யப்பட்டு இருக்கும் சோதனைகள் போதுமானது கிடையாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எபோலாவிற்கு எதிராக இந்த மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. அதேபோல் கொரோனாவை இந்த மருந்து மந்திரம் போல குணப்படுத்தும், சாப்பிட்டவுடன் சரியாகும் என்றும் நம்ப வேண்டாம், என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Coronavirus: Remdesivir shows good results against COVID --19 in the USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X