மிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்நாட்டு மக்களை இந்த செய்தி பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Recommended Video

    கொரோனா உயிரிழப்பு... அமெரிக்காவில் 1 லட்சத்தை தாண்டியது

    உலகிலேயே கொரோனாவை மிக மோசமாக எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    Coronavirus: US death toll crosses 1 lakh due to COVID-19

    கொரோனா வைரஸ் சீனாவில்தான் தோன்றியது. ஆனாலும் அமெரிக்காவில்தான் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 1,714,327 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை விட இது மிக அதிகமான கேஸ்கள் ஆகும்.

    அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு மொத்தம் 469,049 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். நியூயார்க்தான் அங்கு கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    அங்கு மொத்தம் 372,494 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 29,310 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அதேபோல் நியூ ஜெர்சியில் 157,168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தம் 11197 பேர் பலியாகி உள்ளனர். இல்லினாய்ஸ் பகுதியில் 112,017 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 4800 பேர் பலியாகி உள்ளனர்.

    கலிபோர்னியாவில் 96,925 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 3881 பேர் பலியாகி உள்ளனர். பென்சில்வேனியாவில் 72,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5116 பேர் அங்கு பலியாகி உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 56,740 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், 1512 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அந்நாட்டு மக்களை இந்த செய்தி பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    உலகம் முழுக்க இதனால் 5,623,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 348758 தொட்டுள்ளது . சீனாவில் தற்போது வரை 82,992 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 4,634 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+