கொரோனாவை தடுக்க முடியாத மோசமான அரசு என்கிற கேவலத்தை மறைக்க டிராமா போடும் டிரம்ப்
நியூயார்க்: உலகின் மிகப் பெரிய செல்வந்தர் நாடு; வல்லரசு நாடு என்கிற அடைமொழிகளுக்கு உரிய அமெரிக்காதான் இப்போது கொரோனா எனும் ஆட்கொல்லி நோயின் கோரப் பிடியில் சிக்கி கொத்து கொத்தாக மனித உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆட்கொல்லி நோயை தடுக்க திராணியற்ற அதிபர் டிரம்ப்பின் நிர்வாகமோ தமது கையாலாகாதனத்தை மறைக்க நித்தம் ஒரு கூத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
ஹைட்ராக்சிகுளோரோகுயின்.. இந்த மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி கிடைக்கும் என மரணத்தின் பிடியில் இருக்கும் ஒரு தேசமான அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விட்டுப் பார்த்தது உலக அளவில் ஏகடியத்துக்கு உரியதானது.. இந்தியாவும் கூட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்தது. இது பெரும் சர்ச்சையானது.
அதேபோல் உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) தொடர்ந்து மல்லுக்கட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். உலக சுகாதார நிறுவனத்தை சீனாவின் ஏஜெண்ட்டாக முத்திரை குத்துவதில் படுமூர்க்கமாகத்தான் டிரம்ப் செயல்படுகிறார் என்பது மிகையும் அல்ல.

பாராட்டிய டிரம்ப்
இதே டிரம்ப்தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை தொடக்கத்தில் பாராட்டினார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உக்கிரம் அடைந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் மீது மிக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கொரோனா வைரஸை தடுக்க டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது; செயலற்றுப் போய்விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

டிரம்ப்பின் பாய்ச்சல்
இப்படியான அவப்பெயரை எதிர்கொள்ள முடியாமல் திடீரென உலக சுகாதார நிறுவனம் மீது பாய்ந்து கொண்டிருக்கிறார் டிரம்ப். அவர் பாராட்டிய சீனாவுடன் இணைந்து கொண்டுதான் உலக சுகாதார நிறுவனம் உண்மை தகவல்களை மறைக்கிறது; பாரபட்சமாக செயல்படுகிறது; முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் பாய்ந்து பிராண்டுகிறார் டிரம்ப்.

உதார் விடும் டிரம்ப்
இதன் உச்சகட்டமாகத்தான் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தப் போவதாக இன்னொரு உதார் விட்டுள்ளார் டிரம்ப். அமெரிக்காவின் பட்ஜெட்டில் 15% அளவு உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி தரக் கூடியது அமெரிக்காதான். அதாவது கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதி உதவியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் உச்சகட்டமாகத்தான் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தப் போவதாக இன்னொரு உதார் விட்டுள்ளார் டிரம்ப். அமெரிக்காவின் பட்ஜெட்டில் 15% அளவு உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி தரக் கூடியது அமெரிக்காதான். அதாவது கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதி உதவியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனம் செய்தது என்ன?
அதேநேரத்தில் நினைத்த உடனேயே உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவியை டிரம்ப்பால் நிறுத்திவிடவும் முடியாது என்பதும் யதார்த்தம். உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரையில் 2014-ல் எபோலா தொற்று நோய் தாக்கத்தின் போது அதன் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய கொரோனா தொற்று விவகாரத்தில் தம்முடைய செயல்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் மேம்படுத்தியிருக்கிறது என்பது பொதுவான பார்வை.

தொடர் நடவடிக்கைகள்
சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஜனவரி 5-ந் தேதி முதல் இடைவிடாது எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. மனிதர்கள் மூலம் கொரோனா பரவும் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடக்கத்தில் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க கூட மனமில்லாமல் இருந்தார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இடைவிடாமல் செய்த முயற்சியால் அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றானது.

டிரம்ப்பின் போராட்டம்
சீனாவுக்கு வல்லுநர்களை அனுப்பி சோதனைகளை உலக சுகாதார நிறுவனம் நடத்தவில்லை என புகார் பட்டியலை இப்போது வாசிக்கிறார் டிரம்ப். உண்மையில் கொரோனா பரவுதல் தொடங்கிய உடனே வுகான் மாகாணத்துக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு செல்ல முயன்றது; அதற்கு சீனாதான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பின்னர்தான் உலக சுகாதார நிறுவனத்தை உள்ளே அனுமதித்தது சீனா என்பதையும் டிரம்ப் வசதியாக மறந்துவிட்டார். ஏனெனில் தம் மீதான தவறுகளை, தமது அரசின் இயலாமையை மூடி மறைத்துக் கொண்டு நியாயவானாக தம்மை காட்டிக் கொள்ள போராடுகிறார் டிரம்ப் என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications