நிலைமை மோசமாகிவிட்டது.. சிலுவைக்கும் பிறைக்கும் போர் வரப்போகிறது.. அமெரிக்காவிற்கு போன ஷாக் வார்னிங்
நியூயார்க்: காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்கு பின் இருக்கும் முக்கிய குற்றவாளி மேற்கு உலக நாடுகளும் அமெரிக்காவும்தான் என்று துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன உரிமைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து ஆதரவாளராக துருக்கி இருந்து வந்துள்ளது. துருக்கிதான் தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்துள்ளது. அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்கும் துருக்கி.. சிரியா, எகிப்து போர்களில் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில்தான் பாலஸ்தீன போரிலும் அமெரிக்கா, இஸ்ரேலை துருக்கி கடுமையாக எதிர்க்கிறது. இதையடுத்தே தற்போது காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்கு பின் இருக்கும் முக்கிய குற்றவாளி மேற்கு உலக நாடுகளும் அமெரிக்காவும்தான் என்று துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேச்சில், நேற்று கடுமையாக இஸ்ரேல், அமெரிக்காவை தாக்கி பேசினார். மனசாட்சிக் குரல்களை நாம் ஒதுக்கி வைக்காமல் உண்மையை பேச வேண்டும். உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். காஸாவில் நடந்த படுகொலைகள் முழுக்க முழுக்க மேற்குலகின் செயல்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
சிலுவை போர்: இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி. அப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். நிச்சயமாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால் இந்த வழக்கில் நீதி எங்கே இருக்கிறது?. காசா தாக்கப்படும் விதம் சரியானதா? உக்ரைனில் பொதுமக்களின் மரணம் குறித்து "கண்ணீர் வடிக்கும்" மேற்கத்திய சக்திகள் மற்றும் காஸாவில் பாலஸ்தீனிய குடிமக்களின் மரணம் குறித்து கண்மூடித்தனமாக உள்ளனர்.
இந்த இரட்டை நிலைப்பாடுகள் மற்றும் பாசாங்குத்தனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். உடனே போரை நிறுத்த வேண்டும். அமைதியை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசம் ஆகும். அமெரிக்காவின் செயலால்.. சிலுவைப்போர் மீண்டும் ஏற்படும். இந்த முறை சிலுவைக்கும் பிறைக்கும் போர் ஏற்படும் நிலை வரும், என்று துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
போர் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த மோதல் தற்போது உலகப்போராக உருவெடுக்குமோ என்ற அச்சமும் கூட எழுந்துள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹெஸ்புல்லா, ஈரான், லெபனான், அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
அமெரிக்கா இங்கே போர் கப்பல்களை அனுப்ப உள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford தலைமையிலான குழு இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும். அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன. இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எச்சரிக்கை : அமெரிக்கா - இஸ்ரேல் vs பாலஸ்தீனம்,ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அமெரிக்கா உள்ளே வருவதால் தற்போது இதில் சீனாவும் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் போர் உச்சம் அடையும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications