'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்!
சென்னை: இந்த ஆட்சி எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ, அடுத்த கட்சி ஆட்களையும் அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களையும் தொடர்ச்சியாக கொள்முதல் செய்கிறது என்று தவெகவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அட்டாக் செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே திமுக வழக்கம் போல் கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் ஆற்காடு வீராசாமியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி பங்கேற்றனர்.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சியின் கரை வேட்டி கட்டிக் கொண்டு சுற்றும் ஆட்களை நாம் இப்போது அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். அதிலும் சோஃபா மாடல் ஆட்சிக்கு வந்ததற்கு பின் இப்படியான சம்பவங்கள் அதிகமாக இருக்கிறது.
இந்த அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ, அடுத்த கட்சி ஆட்களையும், எம்எல்ஏ-க்களையும் தொடர்ச்சியாக கொள்முதல் செய்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே இயக்கம் என்று ஐயா ஆற்காடு வீராசாமி பயணம் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு வாக்களிக்காத மக்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.
ஆனால் சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பின் இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு நாம் ஓட்டு போட்டு விட்டோமே என்று மக்கள் வருத்தப்பட தொடங்கியுள்ளார்கள். இந்த சோஃபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக சோஃபா மாடல் ஆட்சி என்று விமர்சித்து வருகிறார். ஏற்கனவே தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே சிவி சண்முகம் மற்றும் விசிக அலுவலகங்களில் புதிய சோஃபா இறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த பின், உதயநிதி ஸ்டாலின் 5 சீட்டர் சோஃபா என்று கிண்டல் செய்து பதிவிட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
-
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications