நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த பகீர்.. விடாமல் விரட்டுதே.. 2 தடுப்பூசி போட்டு கொண்டாலும் இந்த "வைரஸ்" அட்டாக் செய்யுமாம்..!

தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குகிறதாம் டெல்டா வைரஸ்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு புது தகவலை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.. தடுப்பூசி போட்டவர்களையும் டெல்டா வைரஸ் விட்டுவைப்பதில்லையாம்.. வீரியத்துடன் மறுபடியும் பரவ தொடங்கிவிட்டது என்று எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், இப்போதைக்கு நமக்கு ஒரே ஆறுதல் தடுப்பூசி மட்டும்தான்.

தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதால், கொரோனா பரவலின் பாதிப்பு அவ்வளவாக இருக்காது என்று நம்பப்படுகிறது..

இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது?.. குட் நியூஸ் சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்! இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது?.. குட் நியூஸ் சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்!

 உருமாற்றம்

உருமாற்றம்

இந்நிலையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா வைரஸ், தொற்று பரவலை அதிவேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக மாறி இருப்பதாக விஞ்ஞானிகள் புது தகவலை தெரிவித்துள்ளனர்.

 வீரியம்

வீரியம்

டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைப்பதில்லையாம்.. மிகவும் வீரியத்துடன் பரவத் தொடங்கி விட்டதாம்.. இந்த டெல்டா வைரஸானது, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தாது.. ஆனால், அவர்கள் மூலம் எளிதாக பரவி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

 தாக்கம்

தாக்கம்

2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் அளவுக்கு கூடுதல் வலிமையும் ஆற்றலையும் இந்த டெல்டா வைரஸுக்கு உள்ளதாம்.. தடுப்பூசி தான் மரணத்தில் இருந்து மட்டுமே மக்களை பாதுகாக்கிறது என்றும், அவர்கள் மூலம் தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா பரவி வருகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டதாக உலக நாடுகள் நினைத்து அசால்ட்டாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள்.

 தடுப்பூசி

தடுப்பூசி

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா உருமாற்ற வைரஸை விட டெல்டா வைரஸ், 50%அதிக ஆபத்தானவை என்றும் சிங்கப்பூரில் டெல்டா வைரஸ் தொற்று மிகவும் சாதாரணமாகி விட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் பாதித்து வருகிறது என்று வார்னிங் செய்துள்ளனர்.

English summary
Delta variant of covid capable of infecting fully vaccinated people, say experts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X