டிரம்ப் கண் முன்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேற்றப்பட்டாரா? அமெரிக்காவில் நடந்தது என்ன? உண்மை!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேற்றப்பட்டதாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது.
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் கடந்த திங்கள் கிழமை அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,.

எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.
இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவி ஏற்றனர். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.
பொய்யான தகவல்:
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேற்றப்பட்டதாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது. பாஜகவினால் இந்தியாவிற்கே அவமானம். டிரம்ப் பதவி ஏற்பின் போது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவையிலிருந்து வெளியேற சொன்ன அதிகாரிகள். பாஜக ஜேம்ஸ் பாண்ட்க்கே அமெரிக்கா கொடுத்த மரியாதை இதுதானா! மோடி போயிருந்தா இருங்க பாய்ன்னு வெளியே நிற்க விட்டிருப்பானுங்க என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பாஜகவினால் இந்தியாவிற்கே அவமானம்.
— Qualified MP ⚪️ (@AalenOff) January 21, 2025
டிரம்ப் பதவி ஏற்பின் போது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவையிலிருந்து வெளியேற சொன்ன அதிகாரிகள்.
பாஜக ஜேம்ஸ் பாண்ட்க்கே அமெரிக்க கொடுத்த மரியாதை இதுனா! மோடி போயிருந்தா இருங் பாய் ன்னு வெளிய நிக்க விட்டிருப்பானுங்க😂 pic.twitter.com/P37qlm3k19
ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை. டிரம்ப் முன்னால் ஜெய்சங்கர் நிற்க.. அவருக்கு முன் பக்கம் கேமரா வுமன் ஒருவர் நிற்கிறார். அங்கே எல்லோரும் அந்நாட்டு தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் போது அந்த கேமரா வுமன் எழுந்து நின்று புகைப்படம் எடுக்கிறார். இதனால் பலரின் முகம் மறைகிறது. டிரம்ப் முகம் கூட பலருக்கும் தெரியவில்லை.
இதையடுத்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வந்து.. இங்கே கீழே அமருங்கள்.. இல்லை பின் பக்கம் செல்லுங்கள் என்று கோபமாக கைகாட்டி அழைக்கிறார். அவர் ஜெய்சங்கர் முன் நிற்பதால் ஜெய் சங்கரை அப்படி சைகை காட்டியது போல பலருக்கும் தோன்றி உள்ளது. ஆனால் ஜெய்சங்கரிடம் அந்த அதிகாரி பேசவில்லை. மாறாக கேமரா வுமனைத்தான் அப்படி பேசி இருக்கிறார். இந்த வீடியோவிற்கான விளக்கமும் இணையம் முழுக்க தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications