8 போரை நிறுத்துன எனக்கு இதெல்லாம் சாதாரணம்.. மீண்டும் தற்பெருமை பேசிய டொனால்ட் ட்ரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஷெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தன்னைத் தானே பெருமையாகப் பேசியுள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான்-ஆப்கனிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவது தனக்கு மிகவும் எளிதானது எனக் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," உலகளாவிய பல போர்களைத் தடுக்கவும் முடிவுக்கு கொண்டு வரவும் தன்னால் முடிந்தது. அதில் ருவாண்டா-காங்கோ மோதல்கள் முதல் இந்தியா-பாகிஸ்தான் போன்ற போர்களுக்கு என்னால் தான் தீர்வுகள் கிடைத்தது.
நான் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்ற விரும்புகிறேன். போர்களை முடிந்தவரை முடிவுக்கு கொண்டு வருவதே என் நோக்கம். இதற்கிடையில் நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனாலும் அமைதிக்காக நான் நிறைய உழைக்கிறேன்.

டொனால்ட் டிரம்ப்
பல போர்களைத் என் நிர்வாகத்தின் போது முடித்துவிட்டேன். ருவாண்டோ - காங்கோவுக்கு இடையிலான போராகட்டும், இந்தியா - பாகிஸ்தான் போராகாட்டும் இதுவரை சுமார் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் போரை முடித்தால் தொடர்புடைய ஒருவருக்கு 'நோபெல் பரிசு' வழங்கப்படும் அதே நேரத்தில், "நோபல் பரிசு எனக்கு வரவில்லை; ஒருவர் அதைப் பெற்றுள்ளார். அவர் யார் என்பதை எனக்கு தெரியும்; அவர் ஒரு நல்லபெண்மணி. எனக்கு இப்போது கிடைக்கவில்லை. ஆனாலும் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதே முதன்மை" என்றார்.
நோபல் பரிசு
கடந்த சில மாதங்களாகவே அமைதிக்கான நோபல் பரிசு குறித்த விவாகரங்கள் தான் உலக அளவில் எழுந்து இருந்தது. இந்தியா பாகிஸ்தான் போர் உள்ளிட்ட பல போர்களை நிறுத்திய தனக்கு தான் விருது வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார். மேலும் டிரம்புக்கு ஆதரவாக பாகிஸ்தான் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேசி வந்தனர். மேலும் பல தருணங்களில் தனக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என மிகவும் நம்பிக்கையுடன் பேசியிருந்தார் ட்ரம்ப்.
வெனிசுலா தலைவி
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலா கட்சியின் தலைவர் வின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டவுடன் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அந்த விருதை வென்ற மரியா கொரினா மச்சாடோ எனக்கு தொலைபேசியில் பேசினார். அவர் என்னிடம், இந்த விருதுக்கு உண்மையில் நீங்கள் தான் உரியவர், நான் அல்ல, என்று சொன்னார்," என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் போர்
அமைதிக்கான நோபல் பரிசு தனது பெயருக்கு தான் வர வேண்டும் என்று டிரம்ப் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தார். "நான் தான் உலகளவில் பல போர்களை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டியவன். எனவே இந்த ஆண்டின் நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்," என்று அவர் பல்வேறு கூட்டங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், நோபல் குழு வெனிசுலா மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட மரியா மச்சாடோவுக்கு பரிசை அறிவித்தது. இதனை வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்த்தது. பரிசு வழங்கும் குழு "அமைதிக்கான பங்களிப்பை விட அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விருதைத் தேர்வு செய்கிறது" என டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், தற்போதும் தற்பெருமை பேசியுள்ளார் என விமர்சனம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications