நாளை முதல்.. அந்த 3 பேருக்கும்.. கண்டிப்பாக தூக்குதான்.. அதிரடியில் இறங்கும் அதிபர் டிரம்ப்.. போச்சு
நியூயார்க்: அமெரிக்காவின் அதிபராக நாளை பதவி ஏற்க உள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அதிபராக பதவி ஏற்றதும் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக எச்சரித்து உள்ளார். முக்கியமாக 3 விதமாக குற்றவாளிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அதோடு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார்.

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்வில், குழந்தைகளை பாலியல் ரீதியாக மாற அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு பாலின சிகிச்சை செய்ய முடியும். திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றுவேன். விளையாட்டு போட்டிகளில் பாலின மாற்றம் செய்தவர்கள் கலந்து கொள்ள முடியாது.
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நடக்கும் பாலினம் தொடர்பான வகுப்புகளை தடுக்கவும் நான் முதல் நாளே முக்கியமான உத்தரவுகளில் கையெழுத்திடுவேன். ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்பேன். "ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் யாருக்கு தூக்கு:
இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் யாருக்கு தூக்கு தண்டனை தருவேன் என்று லிஸ்ட் போட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் ஆட்சியை விட்டு செல்லும் முன் பொதுவாக சில குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இந்த முறை ஜோ பிடன் இதை பயன்படுத்தி பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். முக்கியமாக மரண தண்டனையில் இருக்கும் பலருக்கும் கூட மன்னிப்பு வழங்கி உள்ளார்.
ஜனாதிபதி பிடன், தனது பதவியில் இருக்கும் கடைசி மாதத்தில், மரணதண்டனைக்காக காத்திருக்கும் 40 கைதிகளில் 37 பேரின் தண்டனைகளை குறைத்து உள்ளார். பரோலில் செல்ல வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனை கைதிகளாக இவர்களை அறிவித்தார்.
இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்டவர்களில் 9 பேர் சக கைதிகளைக் கொன்ற குற்றத்திற்காகவும், 4 பேர் வங்கிக் கொள்ளையின் போது செய்யப்பட்ட கொலைகளுக்காகவும், சிறைக் காவலரைக் கொன்றதற்காகவும் சிறையில் இருந்தனர். இவர்களைத்தான் பிடன் விடுதலை செய்துள்ளார். அதோடு பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அதன்படி, நம் நாட்டில் உள்ள மிக மோசமான கொலையாளிகள் 37 பேருக்கு ஜோ பிடன் மரண தண்டனையை நீக்கி உள்ளார். இதை ஏற்க முடியாது. அவரின் செயல் நாட்டையே மோசமாக்கும். இந்த நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும்.
பிடன் எதை எல்லாம் செய்ய கூடாதோ.. அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஆட்சியை விட்டு போகும் முன் இன்னும் சிலரை விடுவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன். அவர் இந்த நாட்டை மோசமாக மாற்ற போகிறார்.
நான் அப்படி விடமாட்டேன். பாலியல் பலாத்காரம் கொலைகாரர்கள், கொலைகாரர்கள், சிறுவர் சிறுமிகளை துன்புறுத்துபவர்களை விட மாட்டேன். அவர்களை எல்லாம் கண்டிப்பாக தூக்கு தண்டனைக்கு உட்படுத்துவேன். அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கிடைக்கும். நான் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சட்டம் கடமையை செய்யும். சட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். தூக்கு தண்டனையை குறைக்காமல் பார்த்துக்கொள்வேன், என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications