அமெரிக்கா முழுக்க போன ஆர்டர்.. டிரம்ப் கையில் எடுத்த "விவகாரமான" விஷயம்.. உலகமே உற்று கவனிக்குது
நியூயார்க்: அமெரிக்காவில் பாலின ரீதியான ஆபரேஷன்களை 19 வயதுக்கு குறைவானோர் மேற்கொள்ள டிரம்ப் இன்று தடை விதித்தார்.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி பல பாலின பிரிவுகள் அது தொடர்பான கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம்.

ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்த பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன. முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இருபாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன. தங்கள் "பலர்" என்று குறிப்பிட விரும்பும் பலரும் உள்ளனர்.
இதை தாண்டி சிலர் தங்களை விலங்குகள், பறவைகளாக அடையாளம் கண்டுகொள்ளவும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். அவர் தீவிரமான வலதுசாரி. அவரின் கொள்கையின்படி 2 பாலினம் மட்டுமே உள்ளது. இயற்கையில் இரண்டு பாலினம் மட்டுமே இருக்க முடியும்.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதை டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவரின் தீவிர வலதுசாரி கொள்கையின்படி இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது. மற்ற கொள்கைகள் எல்லாம் உண்மை கிடையாது. அது நோய் பாதிப்பு. அதை சரி செய்ய வேண்டும். மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டிரம்ப் பல முறை பேசி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம்.
1. அதன்படி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்.. சட்டப்படி பாலின மாற்றங்கள் செய்யப்படும் சிகிச்சைகள் கண்காணிக்கப்படும்.
2. சட்டப்படி பாலின சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் 19வயதுக்கு குறைவானவர்களுக்கு அந்த சிகிச்சை வழங்க முடியாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
3. எந்த விதத்திலும் பாலின மாற்றம் தொடர்பான சிகிச்சைகள் அனுமதிக்கப்படாது.
4. பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
5. பள்ளிகளில் ஒரு குடும்பம், பாலின முக்கியத்துவம், ஆன்மிகம் போன்றவை நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய விதி: அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications