அதிபர் ஆனதும் முதல் நாளே.. இதுதான் ஆக்சன்.. டிரம்ப் கையில் எடுக்கும் "விவகாரமான" விஷயம்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி பல பாலின பிரிவுகள் அது தொடர்பான கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம். ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்றதும் இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவாராம்.

ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்த பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன. முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இருபாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன. தங்கள் "பலர்" என்று குறிப்பிட விரும்பும் பலரும் உள்ளனர்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

இதை தாண்டி சிலர் தங்களை விலங்குகள், பறவைகளாக அடையாளம் கண்டுகொள்ளவும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். அவர் தீவிரமான வலதுசாரி. அவரின் கொள்கையின்படி 2 பாலினம் மட்டுமே உள்ளது. இயற்கையில் இரண்டு பாலினம் மட்டுமே இருக்க முடியும்.

அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதை டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவரின் தீவிர வலதுசாரி கொள்கையின்படி இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது. மற்ற கொள்கைகள் எல்லாம் உண்மை கிடையாது. அது நோய் பாதிப்பு. அதை சரி செய்ய வேண்டும். மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டிரம்ப் பல முறை பேசி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம்.

1. அதன்படி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்.. சட்டப்படி பாலின மாற்றங்கள் செய்யப்படும் சிகிச்சைகள் கண்காணிக்கப்படும்.

2. சட்டப்படி பாலின சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு அந்த சிகிச்சையை வழங்க முடியாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

3. எந்த விதத்திலும் பாலின மாற்றம் தொடர்பான சிகிச்சைகள் அனுமதிக்கப்படாது.

4. பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

5. பள்ளிகளில் ஒரு குடும்பம், பாலின முக்கியத்துவம், ஆன்மிகம் போன்றவை நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புதிய விதி: அதேபோல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.

இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+