எலான் மஸ்க்கின் "ரகசிய" போட்டோக்கள் ஏலம்.. வச்சு செய்த "எக்ஸ்" காதலி.. என்னது.. இவ்வளவு விலையா?!
நியூயார்க்: பிரபல தொழிலதிபரும், உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்கின் பழைய அரிய புகைப்படங்கள் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளன.
புகைப்படங்களை ஏலம் விட்டு சம்பாதிக்கும் அளவுக்கா அவருக்கு பண நெருக்கடி என நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்த புகைப்படங்களை ஏலத்தில் விட்டது அவரல்ல. அவரின் முன்னாள் தோழி.
அதேபோல இந்த படங்கள் மில்லியன் டாலர், ட்ரில்லியன் டாலர் என ஏலத்தில் அறிவிக்கப்படவில்லை. இதன் தொடக்க விலை வெறும் 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

ஏலம்
மேற்கத்திய நாடுகளில் ஏலம் விடுவது ஒரு பிரபலமான செயல்பாடு ஆகும். முன்னாள் அறிவியல் அறிஞர்கள், வரலாற்றில் இடம் பெற்ற போர் வீரர்கள், அரசர்கள் ஆகியோர் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் காசு பார்ப்பது சர்வ சாதாரண விஷயம். ஆனால் உயிரோட இருக்குற ஒருத்தங்களோட பழைய ஃபோட்டோக்களை ஏலத்தில் விடுவது என்பது அரிதான ஒன்றுதான். அதேபோல இந்த ஃபோட்டோவில் உள்ளவர் உலகின் முதல் நிலை பணக்காரர் என்றால் இந்த ஏலம் நிச்சயம் கொஞ்சம் சூடுபிடிக்கும்.

படித்துக்கொண்டிருந்த காலம்
அந்த வகையில், டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தக்காரரான எலான் மஸ்கின் சிறு வயது புகைப்படங்களை அவருடைய தோழி ஒருவர் ஏலத்தில் தற்போது விட்டுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள்தான் இவைகள். இந்த படத்தில் மஸ்கும், அவரது முன்னாள் தோழியும் உள்ளனர். அப்போது இவர்களுக்கு இருபத்தி சொச்சம் வயசுதான். மஸ்குடன் ஃபோட்டோவில் உள்ள ஜெனிபர் க்வின்தான் இந்த ஃபோட்டோக்களை தற்போது ஏலத்தில் விட்டுள்ளார்.

நிதி திரட்ட
தற்போது நாற்பத்தி சொச்சம் வயதான க்வின், தனது வளர்ப்பு மகனின் கல்வி செலவுக்காக நிதி திரட்டவே இந்த ஃபோட்டோக்களை ஏலம் விட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் RR ஏலம் விடும் நிறுவனத்தால் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படங்களின் குறைந்தபட்ச தொகை 100 அமெரிக்க டாலர்களாகும். இவர்கள் இருவரின் இந்த நட்பு சுமார் ஓராண்டு மட்டுமே நீடித்திருந்ததாக கூறிய க்வின், மஸ்க் 1995ல் பாலோ ஆல்டோவுக்குச் சென்றபோது இந்த உறவு முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அப்போதே எலக்ட்ரிக் கார்கள்
க்வின் இதில் ஜூனியர் என்றும், மஸ்க் சீனியராக இருந்ததாகவும் க்வின் குறிப்பிட்டுள்ளார். ஓர் இலையுதிர் காலத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள் ஒருவரையொருவர் பேசி புரிந்துகொண்டதாகவும் தனது குறிப்பில் எழுதியுள்ளார். அதேபோல, மஸ்க் மிகவும் கூச்ச சுபாவத்துடன் இருந்ததாகவும், இதுவே அவரிடம் தனக்கு பிடித்த விஷயம் என்றும் க்வின் கூறியுள்ளார். இவ்வாறான சந்திப்பின் போது அவர் எப்போதும் எலக்ட்ரிக் கார்களை பற்றியே பேசிக்கொண்டிருந்ததாக க்வின் நினைவு கூர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications