மூக்கை உடைத்து கொண்ட டிரம்ப்.. எலான் மஸ்க்கால் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!
நியூயார்க்: அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஃபைல்களை, எலான் மஸ்க்கின் டீம் அணுக முயற்சித்தது. ஆனால் இதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. அதிபராக இருந்தும் கூட, டிரம்பால் நினைத்ததை செய்ய முடியாமல் நீதிமன்றம் கட்டுப்பாடை விதித்திருப்பது, அந்நாட்டில் விவாதமாக வெடித்திருக்கிறது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல தடாலடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில், எலான் மஸ்க்கை சேர்த்துக்கொண்டு அரசு துறைகளை காலி செய்ய தனியாக ஒரு துறையை டிரம்ப் உருவாக்கியிருந்து பேசுபொருளாகியிருந்தது.

இப்படி இருக்கையில்தான் எலான் மஸ்க் மூலமாக, டிரம்ப்பின் மூக்கு உடைந்திருக்கிறது. அதாவது எலான் மஸ்க் தனக்கு கீழே 6 இளைஞர்களை கொண்ட ஒரு டீமை உருவாக்கினார். இதற்கு DOGE என்றும் பெரியரிடப்பட்டது. அதாவது Department of Government Efficiency என்பதுதான் இதன் அர்த்தம். அமெரிக்காவில் FBI, NASA, CIA போல மொத்தம் 400 பொதுத்துறைகள் இருக்கின்றன. எலான் மஸ்க்கின் DOGE டீமின் வேலை என்னவெனில், இந்த துறைகளில் எது சரியாக செயல்படவில்லையோ அதை ஒழித்துக்கட்டுவதுதான்.
அதேபோல மொத்தமுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 75% ஆக குறைக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்க அரசின் செலவுகள் குறையும் என்று டிரம்ப் கணக்கு போடுகிறார். எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள்தான் சரியில்லை. குறிப்பாக எலான் மஸ்க்கும், அவருடைய DOGE டீமும் இந்த விஷயத்தில் எந்த முன் அனுபவமும் கொண்டிருக்காத ஆட்கள். இந்த டீம் அமெரிக்க கருவூலத்தின் டேட்டாக்களை (Data) அணுக முயன்றிருக்கிறது. ஆனால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் மஸ்க்கின் மூக்கை உடைத்திருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காகவே, ஒட்டு மொத்த அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களையும் எப்படி இவர்களிடம் நம்பி கொடுப்பது? என்று அரசு ஊழியர்கள் மற்றும் சில தொழிற்சங்கங்கள் சார்பில் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதில், “அரசு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் தரவுகள் இந்த கருவூலத்தில் இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்கள் (கருவிழி, கைவிரல் ரேகை உள்ளிட்ட அடையாளங்கள்), முகவரி, மக்கள் தொகை, சமூக பாதுகாப்பு எண்கள் (அமெரிக்கர்களின் ஆதார் எண்) ஆகியவை இருக்கின்றன. இதனை இவர்களை நம்பி எப்படி கொடுப்பது?” என்று கேள்வி எழுப்பினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கொல்லர்-கொட்டெல்லி (Kollar-Kotelly), “உங்க இஷ்டதுக்கு எல்லாம் எல்லோரையும் கருவூலத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது. 2 பேருக்கு மட்டும் தற்காலிகமாக அனுமதி கொடுக்கிறேன். சத்தமில்லாம போய் பார்த்துட்டு வந்துடனும். படிக்க மட்டும்தான் அனுமதி. அங்கிருந்து தகவல்களை வெளியே எடுத்து வர கூடாது” என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு அடுத்தடுத்த விசாரணைகள் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.
இதானல் எலான் மஸ்க்குக்கும், அவரை நம்பியிருந்த டிரம்புக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு குறித்து பேசும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், எலான் மஸ்க்கால் இன்னும் எங்கெல்லாம் டிரம்ப் பின்னடைவை சந்திக்கப்போகிறாரோ! என கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications