திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்.. 4 வருடங்களுக்கு பின்.. மீண்டும் வருது ஃபோர்டு.. உறுதியானது!
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது. 2021 இல் மறைமலைநகரில் உள்ள தனது ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திய ஃபோர்டு, தற்போது சென்னை ஆலையில் பவர்டிரெய்ன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை ஃபோர்டு நிறுவனப் பிரதிநிதிகள் சந்தித்து ₹3,250 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். இந்த ஆலையில் முற்றிலும் புதிய, அடுத்த தலைமுறை என்ஜின்கள் தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு நிறுவன ஒப்பந்தம்
ஆண்டுக்கு 2,35,000 என்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், 2029 ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் 600 க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
"முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தபோது, இதற்கான லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Letter of Intent) செப்டம்பர் 2024 இல் கையெழுத்தானது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய என்ஜின்கள் உற்பத்திக்குத் தேவையான தளவாட வசதிகளை உருவாக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்.
ஃபோர்ட் என்ஜின்கள்
உற்பத்தி செய்யப்படும் என்ஜின்கள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் என்றாலும், எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்கத் தடைகள் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் 'அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்' என்ற கொள்கைக்கு மத்தியிலும், ஃபோர்டின் இந்த பெரிய முதலீட்டுத் திட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு வரிகள் தொடர்பான சிக்கல்களில் ஈடுபட்டதால், ஃபோர்டு தனது தமிழ்நாட்டு ஆலையை மீண்டும் திறக்கும் திட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டதாக பிசினஸ்லைன் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்தியாவில் மூன்று தசாப்த கால செயல்பாட்டிற்குப் பிறகு, உற்பத்தி நிறுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின், செப்டம்பர் 2024 இல் ஃபோர்டு தனது சென்னை ஆலையில் உற்பத்தியைத் தொடங்கும் நோக்கத்தை அறிவித்தது.
ஃபோர்டின் பெரிய முதலீட்டுத் திட்டம்
இது, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தனது ஆலையைப் பயன்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசுக்கு லெட்டர் ஆஃப் இன்டென்ட் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. போர்ட் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவை எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளது. இதை திறப்பதற்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட கடந்த 4 வருட இருந்த
காலத்திற்கு பின் சென்னைக்கு போர்ட் திரும்பி வந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையின் தீவிரமான முயற்சியால்.. தொடர் பேச்சுவார்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்
சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் உள்ள ஹென்றி ஃபோர்டு சாலை தற்போது மீண்டும் திமிறி எழுந்துள்ளது. 2022ல் ஃபோர்டு இந்தியா ஆலை செயல்படுவதை நிறுத்தியதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது அந்த பகுதி.
தற்போது போர்ட் வருகை காரணமாக அங்கே புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமலை நகர் மாறியுள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகரில் குறைவாக வளர்ச்சியடைந்த பகுதி, இப்போது எட்டு வழிச் சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைக் கொண்டு பெரிய அளவில் மறைமலைநகர் முன்னேறி உள்ளது. முன்பு ஒரு சில தேநீர்க் கடைகள் மட்டுமே இங்கே இருந்தன. பாண்டலூன்ஸ் மற்றும் ட்ரெண்ட்ஸ் போன்ற பெரிய வணிகச் சங்கிலிகளும், கேஎஃப்சி, பர்கர் கிங் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவுச் கடைகள் இங்கே அதிக அளவில் வந்துள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இங்கே போர்ட் வருவது சென்னையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். அதோடு சென்னை விரிவடைய முக்கிய காரணமாக அமையும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications