டிரம்ப் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம். இதுமட்டும் நடந்தால்.. தங்கம் விலை கையைமீறிப் போகும்! கவனம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் வரி சதவிகிதம் விரைவில் குறைக்கப்பட உள்ளது 0.5 சதவிகிதம் வரை வரி விகிதம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

gold rate silver investment

டிரம்ப் பெடரல் கட்

மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளாராம். அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வரியை குறைக்க வேண்டும். வரி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும்.

அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும். அவரை நீக்கி விட்டு வரியை குறைக்க சொல்ல முடியும். அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

இதற்கு பவல் அளித்த பதிலில், நாங்கள் வரி குறைப்பை பல ஆலோசனைக்கு பின்பே எடுப்போம். டிரம்ப் சொல்கிறார் என்பதால் செய்ய முடியாது. அதோடு 2026 மே வரை என் பதவிக்காலம் இருக்கிறது. அதற்கு முன் நான் ராஜினாமா செய்யும் திட்டத்தில் இல்லை என்று கூறி உள்ளார் .

பவல் எச்சரிக்கை

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து உள்ளது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.

முக்கியமாக டிரம்ப் செய்யும் ஒவ்வொரு மூவும் அதிக பணவீக்கம் ஏற்பட காரணமாக மாறி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவை அதள பாதாளத்திற்கு தள்ளுவதாக அவர் எச்சரித்து உள்ளார்.

டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மோசமானதாக உள்ளன. அவர் எடுக்கும் முடிவுகளை கணிக்க முடியவில்லை. அமெரிக்காவை மோசமான நிலைக்கு தள்ளும் முடிவுகளாக அவை உள்ளன. தினம் தினம் மார்க்கெட் இதனால் பாதிக்கிறது. பல கொள்கைகளின் அடிப்படைகளை அவர் மாற்றுகிறார். அதுதான் சிக்கலே. இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது, என்று கூறி உள்ளார்.

குறையும் வட்டி - அதிகரிக்கும் தங்கம் விலை

அமெரிக்காவில் வரி சதவிகிதம் விரைவில் குறைக்கப்பட உள்ளது 0.5 சதவிகிதம் வரை வரி விகிதம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் அதனால் கடன்களின் மீதான EMI குறையும்.

இன்னொரு பக்கம் சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியும் பாதாளத்திற்கு செல்லும். அதாவது சேமிப்புக்கு கிடைக்கும் ரிட்டர்ன் குறைவதால்.. மக்கள் பலர் முதலீட்டை பணத்தில் இருந்து தங்கத்திற்கு மாற்றுவார்கள்.

அதாவது பணத்தின் மதிப்பு குறைகிறது. இருக்கிற பணத்தை வைத்து பொருட்களை வாங்க முடியவில்லை. டாலரின் மதிப்பு வேகமாக சரிகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். இதை மனதில் வைத்து மக்கள் பலர் தங்கத்தை நோக்கி செல்வார்கள்.

டாலர் அடுத்த சில நாட்களுக்கு எதிர்பார்க்காத சரிவை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதன் காரணமாகவே தங்கம் விலை உச்சத்தை அடையும். இதையடுத்தே பொருளாதார நிபுணர் எட் யார்டெனி, தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் $5,000 ஆகவும், 2028-ஆம் ஆண்டுக்குள் $10,000 ஆகவும் (சுமார் ₹8,87,000) உயரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இது 10 கிராம் தங்கத்தின் விலை ₹3.1 லட்சமாக உயரும் என்பதைக் குறிக்கும், ஏனெனில் ஒரு அவுன்ஸ் என்பது 28 கிராமுக்குச் சமம். அதாவது ஒரு சவரன் கிட்டதட்ட ரூ.2.5 லட்சம் ஆக உயரும்.

மத்திய வங்கிகள் தங்கள் சர்வதேச கையிருப்புகளில் தங்கத்தின் சதவீதத்தை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று யார்டெனி சுட்டிக்காட்டினார். இது தங்கத்தின் மீதான உலகளாவிய தேவையைத் தூண்டி, அதன் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கணித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+