Gold Price: உலக சந்தையையே உலுக்கிப் போட்டாச்சு! தங்கத்தின் விலையில் மிகப் பெரிய மாற்றம்! மீண்டும் மீண்டுமா? ஷாக்
நியூயார்க்: உலகளாவிய சந்தைகளில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய சரித்திர சாதனையை எட்டியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் ( Us Federal Reserve ) வட்டி விகிதக் குறைப்பு தொடரும் என்ற எதிர்பார்ப்பும், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட அரசியல் பதற்றங்களும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடு (Safe Haven) என்பதால் தங்கத்தை நோக்கி திருப்பியுள்ள நிலையில், மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
உலக அளவில் பொருளாதார சூழ்நிலை, போர் உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பு சரிவு, டாலருக்கு நிகரான மற்றொரு நாணயத்தை தேடும் உலக நாடுகள், போர் உள்ளிட்ட அவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தை விட தற்போது கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை உயர்வு
அந்த வகையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 22, 2025) வணிக நேரத்தில், ஸ்பாட் கோல்ட் (Spot Gold) 1.7% உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 3,747.08 அமெரிக்க டாலர் என்ற சரித்திர சாதனை உயர்வை எட்டியது. அதாவது, இந்திய மதிப்பில், 3,31,898 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை (0.25%) குறைத்தது. இது 2024 டிசம்பருக்கு பின் முதல் முறையாக வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகும்.
தங்கம் சரித்திர சாதனை
மேலும், ஆண்டு இறுதிக்குள் கூடுதல் குறைப்புகள் செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் வட்டி குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்பி இருக்கின்றனர்.
அமெரிக்க வட்டி குறைப்பு
வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் பணவீக்க தரவு வெளியாக இருக்கும் நிலையில் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யா உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) மாகாணத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் அப்பகுதியில் உள்ள Kalynivske குடியிருப்பில் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு போர்ச்சூழல் கடுமை அடைந்திருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக தேர்வு செய்து வருகின்றனர்.
வெள்ளி விலை உயர்வு
இதனால்தான் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் 2.1% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 43.99 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் பிளாட்டினம் 1118 டாலருக்கும், பலோடியம் 1186 டாலருக்கும் விற்பனையாகிறது. Societe Generale நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த மாதங்களில் இங்கிலாந்தில் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மீண்டும் 63 டன் என உயர்ந்துள்ளது. இது 2022க்குப் பிந்தைய சராசரி அளவுடன் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளில் வரலாற்று சம்பவம்.. ஒரே நாளில் cheque clear.. அக்டோபர் 4, ஜனவரி 3 ல் ஆர்பிஐ மேஜர் மாற்றம்
பொருளாதார நிபுணர் கணிப்பு
Kitco Metals நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளர் ஜிம் வைக்காப் (Jim Wyckoff) கூறுகையில்," வட்டி விகிதக் குறைப்புகள், போர் சூழ்நிலை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேவை ஆகியவை தங்க விலையை தொடர்ச்சியாக உயர்த்துகின்றன. வருட இறுதிக்குள் கூடுதல் வட்டி குறைப்புகள் வந்தால், தங்க விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது" என்றார்.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications