நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெளிவற்றவர், பதட்டமானவர்.. ஒபாமா புத்தகத்தில் ராகுல் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதி இருக்கும் 'A Promised Land' புத்தகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதி இருக்கும் ''எ பிராமிஸ்ட் லேன்ட் (A Promised Land)' என்ற புத்தகம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து ஒபாமா இதில் விமர்சனம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ரஷ்ய அதிபர் புடின் போன்ற உலக தலைவர்கள் குறித்து ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அதில், ராகுல் காந்தி ஒரு பதற்றமான நபர், தெளிவற்றவர். அவர் ஒரு மாணவர் போன்றவர். தனது டீச்சர் முன்பு அவர் பெயர் எடுக்க விரும்புகிறார். ஆர்வமாக இருக்கிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர் முழுமையான சுய தயாரிப்புகளை செய்வது இல்லை. ஆழமாக கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் திறமையும் அவரிடம் இல்லை, என்று ராகுல் காந்தி குறித்து ஒபாமா விமர்சனம் செய்துள்ளார். 2017ல் ராகுல் காந்தியும், ஒபாமாவும் டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பை குறிப்பிட்டுதான் ஒபாமா இப்படி விமர்சனம் செய்துள்ளார்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் ஒபாமா.. மன்மோகன் சிங் பொருளாதார நிபுணர். மிகவும் அமைதியான நபர். தனது முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர் கிடையாது, என்று மன்மோகன் சிங் குறித்து ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

புடின்

புடின்

ரஷ்ய அதிபர் புடின் குறித்து பேசி இருக்கும் ஒபாமா.. புடின் மிகவும் வலிமையான நபர். அரசியல் நுட்பங்களை தெரிந்தவர் புடின். அரசியல் ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் புடின் மிகவும் வலிமையான நபர், என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

English summary
He is a man with Nervous, Unformed Quality says Obama on Rahul Gandhi in the A Promised Land book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X