நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கே உறவு ".. கடைசி நிமிடம் வரை எகிறிய டென்ஷன்.. ஓரின சேர்க்கையாளர்களுக்கு பறந்து வந்த ஹேப்பி நியூஸ்

ஓரின சேர்க்கையாளர் திருமண மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா நிறைவேறியது.. இதையடுத்து அந்த மசோதா இப்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
அமெரிக்க மக்களிடையே ஒரே பாலின திருமணத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது.. ஒரே பாலாரும் திருமணம் செய்வது அதிகரித்தும் வருகிறது.

ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கைக்கு உலகில் பல நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.

நாயகன் உதயம்.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் கட்சி தலைவராகும் இந்திய வம்சாவளி? யார் இந்த ஹக்கீம் ஜெப்ரிஸநாயகன் உதயம்.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் கட்சி தலைவராகும் இந்திய வம்சாவளி? யார் இந்த ஹக்கீம் ஜெப்ரிஸ

 ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

இவர்கள் திருமணம் செய்து வாழவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில், முதன்முதலாக மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகுதான், மற்ற பல மாகாணங்களிலும் அனுமதி தரப்பட்டது.. அதே நேரம், 14 மாகாணங்களில் இந்த திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது... இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கை பிரியர்கள் அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 ஓரின சேர்க்கை

ஓரின சேர்க்கை

இதை விசாரித்த சுப்ரீம்கோர்ட், "நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழலாம். இதற்கு எவ்வித தடையும் இல்லை" என்று கடந்த 2015ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்நிலையில்,கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருந்தது.. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்துகொண்டே வந்தது..

 12 + 61 உறுப்பினர்கள்

12 + 61 உறுப்பினர்கள்

இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் செனட்சபையில், இந்த மசோதா மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது..

கையெழுத்து

கையெழுத்து

இதையடுத்து அந்த மசோதா இப்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்... ஜனாதிபதியும் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகிவிடும்.. எப்படியும் ஜோ பிடன் அதில் கையெழுத்து போட்டுவிடுவார் என்ற நம்பிக்கையும் தற்போது அமெரிக்காவில் பெருகி வருகிறது.

 யார் புருஷன்?

யார் புருஷன்?

நம்ம நாட்டிலும் இப்படி, ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகிறது... இந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டெல்லி ஹைகோர்ட்டில், 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. இந்த திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகிவிடும். இந்த திருமணத்தில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி முடிவு செய்வது? இந்த திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்படும். அதனால், இதை அங்கீகரிக்க முடியாது' என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Homosex: US senate passes bipartisan bill protecting same gay marriage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X