Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மனித தலை".. வாயில் கவ்வியபடி.. தள்ளாடி தள்ளாடி ரோட்டில் திரிந்த நாய்.. தெறித்து ஓடிய மக்கள்..!

நாய் ஒன்று மனித தலையை வாயில் கவ்வியவாறு ரோட்டில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பார்ப்பவர்கள் எல்லாம் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளனர்..

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன..

அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.. அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி இருக்கிறது.. ஆனால், எல்லாரிடமும் துப்பாக்கி இருப்பது தான் பாதுகாப்பு என்று அம்மக்கள் நினைக்கிறார்களாம்..

 மனித தலை

மனித தலை

இந்நிலையில், அமெரிக்கா, மெக்சிகோ சாலையில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. நைட் நேரத்தில் ஒரு நாய் சாலையில் வேகமாக ஓடியுள்ளது. அதன் வாயிலே ஏதோ பெரிய பொருளை கவ்வியிருப்பதாக நினைத்தனர் அங்குள்ள மக்கள்.. ஆனால், அருகில் சென்று பார்த்தபிறகுதான் அது மனித தலை என்றே தெரியவந்துள்ளது.. இரவு நேரத்தில் வாயில், மனித தலையை பார்த்ததுமே, மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.. ஆனால் அந்த நாய் அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்துள்ளது..

 தலை சாப்பாடு

தலை சாப்பாடு

அதனால், ஒருசிலர் மட்டும் தூரமாக நின்று இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இறைச்சி என்று நினைத்து இந்த தலையை சாப்பிடுவதற்காக, எங்கே எடுத்து செல்லலாம் என்று நினைத்தபடியே அந்த நாய் சுற்றி திரிந்துள்ளது. அந்த தலை யாருடையது என்று தெரியவில்லை.. மெக்சிகோ வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் உள்ள சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மனித தலையை நாய் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மான்டே எஸ்கோபெடோ என்ற நகரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இந்த தலை கிடந்ததாம்.

 நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

"அடுத்தது உன்னுடைய தலைதான்" என்ற வாசகம் ஒரு பலகையில் எழுதி தொங்க விடப்பட்டுள்ளதாம்.. இப்படி எழுதி வைத்தவர்கள் அநேகமாக சைக்கோபேர்வழியாக இருக்கலாம் அல்லது போதைக்கு அடிமையானவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போதைப்பொருள் ஆசாமிகள் அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் இது போன்றவற்றை செய்து இருக்கலாம் என்கின்றனர்..

 மனித தலை

மனித தலை

இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.. ஆனால் நாயிடம் இருந்து மனித தலையை மீட்க படாதபாடு பட்டுவிட்டனர்.. அந்த நாய் ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக்காண்டே இருந்ததுடன், போலீசாரை பார்த்ததும், மனித தலையை கெட்டியாக பிடித்து கொண்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்துவிடுகிறது.. இதனால், விரட்டி விரட்டி, கஷ்டப்பட்டுதான் மனித தலையை மீட்டார்கள்.. இதற்கு பிறகுதான் விசாரணையையே போலீசார் துவக்கினார்கள்..

 மனித இறைச்சி

மனித இறைச்சி

அப்போதுதான், மவுண்ட் எஸ்கோபெடோ என்ற பகுதியில் இறந்துபோன நபரின் மற்ற உடல் உறுப்புகள் சிதறி கிடந்ததாம்.. அதனால் இறந்தவர் யார் என்றே இதுவரை தெரியாமல் போலீசார் விழிபிதுங்குகிறார்கள்.. இப்போதைக்கு அந்த மனித தலையை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்-.. ஆனால், நடந்த கொலை திட்டமிடப்பட்டு நடந்த கொலை என்கிறார்கள்.. குரேரோ என்ற பகுதியில் இரு தரப்பு கும்பலிடையே ஏற்பட்ட சண்டையில், முன்னாள் மேயர் உட்பட 18 பேர் சம்பவத்தன்று இறந்து போனார்களாம்..

 தள்ளாடி.. தள்ளாடி

தள்ளாடி.. தள்ளாடி

மேலும் சோகேடாஸ் மாவட்டத்தில் கடந்த சில காலமாகவே குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலும், போதை பொருள் விற்பனையாளர்களிடையே சமீபகாலமாகவே தொழில் போட்டி இருந்து வருவதாகவும் தெரிகிறது.. இதனால் ஏற்பட்ட மோதலிலும் இப்படியான கொலை நடந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், ஓரிரு நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அந்த நாட்டு போலீசார்.. ஆனால், மனித தலையுடன் அந்த நாய் தள்ளாடி தள்ளாடி நடந்த வீடியோதான் இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+