கதறும் அமெரிக்க மக்கள்.. சீனாவை சீண்ட போய் சொந்த நாட்டையே காலி செய்த டிரம்ப்.. வீழும் அமெரிக்கா?
சென்னை: சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பதிலடி வரிகள் காரணமாக சீனாவை விட அமெரிக்காதான் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது டிரம்ப் வரி போட காரணம்.. சீனா மீது வரி போட்டால் சீன நிறுவனங்களை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்ற எண்ணம்.
அதாவது சீன பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்று மக்கள் வாங்க மாட்டார்கள் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் சீன பொருட்கள் இல்லாமல் அமெரிக்கா இருக்க முடியாது. அமெரிக்காவில் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவிகிதம் சீன பொருட்கள்தான்.
டிரம்ப்பிடம் உள்ள இன்னொரு நோக்கம்.. சீனா மீது வரி போட்டால் சீன நிறுவனங்கள் வரிகளை சமாளிக்க சீனாவில் இருந்து வெளியேறுவார்கள். அமெரிக்காவில் தொழிற்சாலை தொடங்குவார்கள். இதனால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கும் என்பதே டிரம்ப் திட்டம்.
சீனா மீது வரி
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
அழியும் அமெரிக்க பொருளாதாரம்
ஆனால் இந்த வரி விதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள்தான். உதாரணமாக
1. இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் கப் அண்ட் சாஸர் ஒன்றை இறக்குமதி செய்தால்.. அதற்கு 245% வரி விதிக்கப்படும். ஆனால் இதை யார் கொடுப்பார்?
2. சீனா கொடுக்காது. இந்த வரியை இறக்குமதி செய்பவர்தான் கொடுப்பார். அதாவது யார் இறக்குமதி செய்கிறார்களோ.. அமெரிக்காவை சேர்ந்த அவர்கள்தான் கூடுதல் வரி போடுவார்கள்.
3. இதற்காக ஏற்படும் செலவை சமாளிக்க அவர்கள் விலையை ஏற்றுவார்கள்.
4. அந்த விலையை கொடுக்க போவது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க மக்கள்தான்.
5. சில விவசாய பொருட்களின் விலையை ஏற்ற முடியாத பட்சத்தில்.. அதை இறக்குமதி செய்யும் விவசாயிகள்தான் சமாளிக்க வேண்டும். அவர்கள்தான் இழப்பை சந்திப்பார்கள்.
டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications