ரஷ்யாவை கைவிட்ட இந்தியா.. காப்பாற்றும் சீனா.. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து எடுத்த புதிய முடிவு
நியூயார்க்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை கைவிட்டுவிட்டு, வெனிசுலாவில் இந்தியா எண்ணெய் வாங்க போவதாக கூறிய டிரம்ப், அதற்கு பிரதிபலனாக அபராத வரியான 25 சதவீதத்தை நீக்குவதுடன், 25 சதவீத வரியை 18சதவீதம் வரியாக குறைத்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு ஒருபுறம் எனில், ஐரோப்பாவும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு செக் வைத்துள்ளது.இப்போதைய நிலையில் ரஷ்யாவை காப்பாற்றும் ஒரே நாடு சீனா மட்டுமே.
வியாபாரியான டிரம்ப், லாபம், நஷ்டம் கணக்குகளை பார்த்தே ஒவ்வொரு நாட்டுடனும் கடினமான ஒப்பந்தங்களை செய்து வருகிறார். அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒப்பந்தங்களை செய்து வருகிறார்கள். இதற்காக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் அவர் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

25 சதவீதம் கூடுதல் வரி
அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமெரிக்கா அமல்படுத்தியது. இந்தியா-அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா கூறியது.
அபராத வரி
அதேபோல் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தி அமெரிக்கா உத்தரவிட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இந்த வர்த்தக பதற்றம் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்தது. இதுதொடர்பாக சமரச பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயை மார்ச் மாதத்துக்குள் பாதியாக குறைப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக சொல்லப்பட்டது. மேலும் வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய டிரம்ப்
இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டிரம்ப் ட்வீட்
இதுதொடர்பாக தன்னுடைய ''டுரூத்'' சமூக வலைதளத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்திய பிரதமர் மோடியுடன் பேசியது பெருமையாக இருந்தது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆவார். அவரது நாட்டின் சக்தி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவரும் கூட. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மற்றும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருதல் உள்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் இருவரும் விவாதித்தோம். ரஷியாவிடம் இருந்து ஆயில் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவில் இருந்தும், வெனிசுலாவில் இருந்தும் மேலும் அதிகமாக ஆயில் வாங்கவும் அவர் (மோடி) ஒப்புக்கொண்டார்.
மோடி வரவேற்பு
இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் இந்த முடிவு உதவும். அங்கு ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக அவரது வேண்டுகோளின்படி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர வரியை வசூலிக்கும். அதை 25 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கும். இதைப்போல அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் வரியை அவர்கள் குறைப்பதுடன், வரி இல்லா நிலையை நோக்கியும் நகருவார்கள். அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல தயாரிப்புகளை 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மிக உயர்ந்த மட்டத்தில் வாங்க பிரதமர் மோடி உறுதியளித்தார்.(இந்திய மதிப்பில் இது 45 லட்சம் கோடியாகும்)-
இந்தியாவுடனான எங்கள் அற்புதமான உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும், நானும் நல்ல விஷயங்களை செய்து முடிப்பதில் வல்லவர்கள். இது பெரும்பாலானவர்களுக்கு சொல்ல முடியாத ஒன்று. இந்த விஷயததில் உங்கள் கவனத்துக்கு நன்றி" இவ்வாறு அதில் டிரம்ப் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வரவேற்பு
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பதிவில் கூறுகையில், வரி குறைப்புக்காக 140 கோடி மக்கள் சார்பாக டிரம்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் டிரம்பின் தலைமை மிக முக்கியமானது. 2 பெரிய பொருளாதாரங்களும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது அது மக்களுக்கு பயனளிக்கும். அமைதிக்கான அதிபர் டிரம்பின் முயற்சியை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது" இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும். இந்திய பொருளாதாரமும் உயரும் என தெரிகிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதித்திருந்த 25% கூடுதல் அபராத வரியை நீக்கச் சம்மதித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் போர் தணிந்துள்ளது அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய்க்கான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஒரு பேரல் விலை $44.10 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதால், சர்வதேச அளவில் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் புதிய சவால்கள் எழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் தற்போதைய நிலையை வைத்துப் பார்த்தால், அவர்கள் அவ்வளவு எளிதில் அமெரிக்காவின் "வழிக்கு வருவார்களா" என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா சில நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பது உண்மை. ரஷ்யா அமெரிக்காவின் வழிக்கு வர வாய்ப்புள்ள காரணங்கள் மற்றும் அவர்கள் பிடிவாதமாக இருக்கக் கூடிய காரணங்களை இப்படிப் பார்க்கலாம்.
1. ஏன் ரஷ்யா வழிக்கு வரக்கூடும்? (பொருளாதார நெருக்கடி)
இந்தியா தான் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்தியா ரஷ்ய எண்ணெயை நிறுத்துவது, ரஷ்யாவின் கஜானாவிற்குப் பெரிய அடியாகும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் $44.10 ஆகக் குறைக்கப்பட்டிருப்பது, ரஷ்யாவின் லாபத்தை பெருமளவு குறைத்துள்ளது. போர்ச் செலவுகளைச் சமாளிக்க இது அவர்களுக்குப் போதாது.
உள்நாட்டுப் பணவீக்கம்: ரஷ்யாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போவதால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படலாம். இது புதினைப் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரக்கூடும்.
2. ஏன் ரஷ்யா வழிக்கு வராது? (பிடிவாதம்)
இந்தியா குறைந்தாலும், சீனா இன்னும் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது உக்ரைன் போரில் தான் வெல்ல வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கிறது. "பொருளாதாரத் தடைகள் எங்களை ஒன்றும் செய்யாது" என்ற பிம்பத்தைக் காட்ட அவர்கள் விரும்புவார்கள். ரஷ்யா தனது சொந்த வளங்களைக் கொண்டு நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நம்புகிறது.
3. ராஜதந்திரம்
அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்பட்ட இந்த 18% வரி ஒப்பந்தம், ரஷ்யாவிற்கு ஒரு மறைமுக எச்சரிக்கைதான். "உங்கள் எண்ணெயை விட எங்களுக்கு வர்த்தகம் முக்கியம்" என்று இந்தியா காட்டியிருப்பது ரஷ்யாவை யோசிக்க வைத்திருக்கும். தற்போதைய சூழலில் பார்த்தால், ரஷ்யா முழுமையாக வழிக்கு வராவிட்டாலும், தனது நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்றும் உக்ரைன் போர் தொடர்பாக ஒரு தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளும் சூழல் 2026-ன் இரண்டாம் பாதியில் உருவாகலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications