கப்பலேறிய இந்தியாவின் மானம்.. வீட்டு வேலை செய்யாத கணவரின் கழுத்தை அறுத்து.. அமெரிக்காவே ஆடிப்போச்சு
நியூயார்க்: கணவனை மனைவி டார்ச்சர் செய்வது, மனைவியை கணவன் டார்ச்சர் செய்வது போன்ற குடும்ப வன்முறைகள் உலக நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு தம்பதி கோர்ட் வரை சென்றிருக்கிறார்கள்.. இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளி தம்பதி என்பது கூடுதல் விஷயமாகும். சாதாரண குடும்ப சண்டை கோர்ட் வரை சென்று, கரோலினா மாகாணத்தில் பரபரப்பையும் தந்து விட்டது. என்ன நடந்தது தெரியுமா? யாரிந்த பெண்?
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. சார்லட் நகரில் வசித்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த்.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சந்திரபிரபா சிங்.. அவருக்கு 44 வயதாகிறது

அமெரிக்கா தம்பதி
கரோலினா மாகாணத்திலேயே எண்ட்ஹேவன் தொடக்க பள்ளி ஒன்றில் சந்திரபிரபா சிங் உதவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி விடுமுறை தினத்தன்று, அதாவது அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்றுவிட்டார் சந்திரபிரபா. உடனே கிச்சனுக்கு ஓடிச்சென்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவரின் கழுத்தை அறுத்துவிட்டார்.
அவசர உதவி எண்
இதில் படுகாயமடைந்த அரவிந்த், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.. பிறகு சுதாரித்து கொண்டு, அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து உடனே வந்த போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த அரவிந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது போலீசாரிடம் அரவிந்த் புகார் தந்தார்.. அதில், வீட்டு வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த மனைவி, என்னை வேண்டுமென்றே கத்தியால் அறுத்துவிட்டார்" என்று வாக்குமூலம் தந்தார்.. உடனே போலீசார் இதுகுறித்து சந்திரபிரபாவிடம் விசாரித்தனர்.. ஆனால், சந்திரபிரபா , கணவரின் குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்..
யதேச்சையாக கத்தி
இதுகுறித்து போலீசாரிடம் அவர் சொல்லும்போது, "நான் காலையில் டிபன் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் கையில் கத்தி இருந்தது.. அந்த நேரம் பார்த்து, என் கணவர் வந்தார்.. நான் யதேச்சையாக கையில் கத்தியுடன் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கணவரின் கழுத்தில் வெட்டுப்பட்டு விட்டது" என்றார்,.எனினும், சந்திரபிரபா சொன்ன காரணத்தை போலீசாரால் ஏற்க முடியவில்லை.. உடனே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சந்திரபிரபாவை கைது செய்தனர்.
சட்டவிரோதமாகவும், உள்நோக்கத்துடனும் கொடூரமாக கணவரின் கழுத்தை அறுத்ததாக சந்திபிரபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கு கோர்ட் வரை சென்றது..
உள்நோக்கம் - கைது
அப்போது தனக்கு ஜாமீன் வேண்டும் என்று சந்திரபிரபா கோரினார்.. முதலில் அவருக்குப் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், பிறகு 10,000 டாலர் ஜாமீனில் அவரை விடுவித்தது. இப்போது அவர், மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கணவரின் கழுத்தை அறுத்தது, கைது, கோர்ட் என்று இந்த சம்பவம் கரோலினா மாவட்டம் முழுவதும் பரபரத்தது.. இதையடுத்து, பள்ளியில் பணியாற்றி வந்த சந்திரபிரபாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்திருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications