விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. தவறு எங்கு நடந்தது? ஆய்வாளர்கள் விளக்கம்
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், குறிப்பிட்ட தேதியில் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். வெறும் 7 நாட்களுக்காக திட்டமிடப்பட்ட இந்த பயணம், எப்படி 7 மாதங்களாக நீடித்தது? என்பது குறித்து ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார்லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். சுனிதா அடுத்த ஆண்டு விண்வெளியிலிருந்து பூமிக்கு அழைத்துவரப்படுவார் என்று நாசா கூறியுள்ளது. இதற்கிடையில் ஸ்டார்லைனர் விண்கலம் சில நாட்களுக்கு முன்பு, ஆள் இல்லாமல் பூமிக்கு வந்து சேர்ந்தது.
இப்படி இருக்கையில் சுனிதா எப்படி விண்வெளியில் சிக்கினார் என்பது குறித்து ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். இது டைம்லைனில் விளக்கப்பட்டிருக்கிறது.
1. கடந்த ஜூன் 5ம் தேதி கேப் கனாவரலில் இருந்து போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்ஸ்யூல் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அனுப்பி வைக்கப்பட்டனர். பயண நாட்கள் ஒரு வாரம்தான்.
2. ஸ்டார்லைனர் கேப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
3. டாக்கிங் செய்த சிறிது நேரத்திலேயே, ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் பல த்ரஸ்டர்கள் செயலிழக்கத் தொடங்கின.
4. த்ரஸ்டர் குறித்து ஆய்வு செய்ய தொடங்கியபோது ஹீலியம் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
5. விண்வெளியில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான். எனவே இதனை சரிசெய்ய ஏற்கெனவே விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிக்கல்களை சரி செய்ய அதிக நாட்கள் தேவைப்படும். எனவே சுனிதா விண்வெளியில் சிக்கிக்கொண்டார் என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications