அமெரிக்கா மாதிரி இல்லை! டிரம்பிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு.. 10,000 வீரர்கள் உள்ள இடத்தை தாக்கிய ஈரான்
டெஹ்ரான்: ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அல் உடீத் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் situation அறையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்து வருகிறார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து கத்தாரில் உள்ள தளங்கள் மீது 6 ஏவுகணைகளை ஏவியது என்று ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 23, 2025 அன்று, ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது சற்று முன் ஏவுகணைகளை ஏவியது. ஆபரேஷன் பெஷாரத் ஃபதா என்று பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோஹாவுக்கு வெளியே அமைந்துள்ள அல் உடீத் விமானத் தளத்தில் அமெரிக்கா சுமார் 10,000 துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவலாகும், மேலும் இப்பிராந்தியத்தில் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்குதான் ஈரான் தாக்கி உள்ளது.
கத்தாரில் தாக்குதல்
ஏவுகணைகள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அமெரிக்க விமானத் தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்துவிட்டதாக கத்தார் கூறியதுடன், ஈரானின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. முன்னதாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியது. "பாதுகாப்பு அச்சுறுத்தல்" காரணமாக தங்கள் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் அறிவுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த திடீர் எச்சரிக்கைகளால் தோஹா முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் என பல நிறுவனங்கள் ஊழியர்களையும் மாணவர்களையும் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தின. ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய அதே எண்ணிக்கையிலான குண்டுகளை திருப்பித் தாக்குதலில் பயன்படுத்தியதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா 6 குண்டுகளை பயன்படுத்தியது.. அதேபோல் ஈரான் 6 குண்டுகளை பயன்படுத்தி பதில் அளித்துள்ளது.
இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெகசெத் மற்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோருடன் வெள்ளை மாளிகையின் situation அறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு











Click it and Unblock the Notifications