குழம்பிய ஜிபிஎஸ்! வான்வெளி மூடல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவிய 6 ஏவுகணைகள்! உலகப்போர் ஆரம்பம்?
நியூயார்க்: எதிர்பார்த்தபடியே அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிறுவங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உடேத் விமானத் தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
கத்தார் மீது ஆறு ஏவுகணைகளும், ஈராக் மீது ஒரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் இரண்டுமே அந்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டவை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
பதிலடி
"பஷாரத் அல்-ஃபத்" நடவடிக்கை
இந்த நிலையில்தான் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவப் தளவாடங்களை குறிவைத்து "பஷாரத் அல்-ஃபத்" என்ற பெயரில் இந்த தாக்குதலை ஈரான் அறிவித்துள்ளது.
எதிரொலியாக கத்தார் வான்வெளியை மூடியது
இந்தத் தாக்குதலை எதிர்பார்த்து கத்தார் தனது வான்வெளியை மூடியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் பாரசீக வளைகுடா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைந்துள்ளன. கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அங்குள்ள மக்களை வெளியேறும்படி அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக மறைவான, தாழ்வான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமிங்
அதே நேரத்தில் பாரசீக வளைகுடா முழுவதும் பரவலான ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமிங் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் வழிசெலுத்தலில் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. கத்தாரில் ஈரான் நடத்திய முதல் உறுதிப்படுத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் இதுவாகும். அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் படைகள் சக்திகள் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதால் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கையானது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இப்பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த போர் முழுமையான உலகப்போராக உருவெடுக்கும் அபாயங்கள் உள்ளன.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications