வர்த்தக போர் + ஈரான் அட்டாக் + ரஷ்யா ஆயுதம்.. 3ம் உலகப்போரை தொடங்கி வைத்த டொனால்ட் டிரம்ப்? ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் இன்று தொடங்கும் அமெரிக்காவின் வர்த்தக போர் ஒரு பக்கம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக விடுத்துள்ள அணு ஆயுத வார்னிங் இன்னொரு பக்கம் ஆகியவை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரானை தாக்கினால் ரஷ்யா அமெரிக்காவை தாக்குவோம் என்று வார்னிங் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் எல்லாம் சேர்ந்து உலகப்போரை தொடங்கி வைக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் - அமெரிக்கா மோதல்

ஈரான் தங்களின் அணு ஆயுத கொள்கையை, மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது. ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.

USA Donald Trump Visa

ரஷ்யா பதில் எச்சரிக்கை

அமெரிக்காவின் விதிகளுக்கு அடிபணிந்து உடனே ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும், அணு ஆயுதம் தொடர்பான ஆலோசனைகளை, ஆராய்ச்சிகளை கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார். அமெரிக்காவின் விதிகளுக்கு அடிபணியவில்லை என்றால்.. அமெரிக்கா சார்பாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம். ஈரான் மீது அமெரிக்கா சார்பாக மிகப்பெரிய குண்டுகளை.. உலகமே பார்க்காத அளவிற்கு குண்டுகளை போட போகிறோம்.. எங்களின் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்.. என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவிற்கு பதிலடி தருவதற்காக ஈரான் இப்போதே ஏவுகணைகளை நிரப்பி தயார் நிலையில் வைத்துள்ளது. இன்னொரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா தாக்கினால்.. அமெரிக்கா மீது பதிலடி நடவடிக்கைகளை எடுப்போம்.. மிக மோசமான கடுமையான பதிலடியை சந்திப்பீர்கள் என்று எச்சரித்து உள்ளார்.

சீனா திட்டம்

இது போக சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Take a Poll

அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. ஆனால் சீனாவை சீண்டுவதற்காக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதோடு சீனாவிடம் இருந்து பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தைவான் அமெரிக்காவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது.

வர்த்தக போர்

இன்னொரு பக்கம் இன்று இரவு 11 மணி முதல் 1 மணி வரை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடுவார். வர்த்தக போர் இதன் மூலம் இன்று தொடங்கும். இந்த வர்த்தக போர் நீண்டதாக.. கொடியதாக இருக்க போகிறது.

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படி உலக அளவில் இன்று தொடங்கும் அமெரிக்காவின் வர்த்தக போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக விடுத்துள்ள அணு ஆயுத வார்னிங், ரஷ்யா அமெரிக்காவை தாக்குவோம் என்று விடுத்த வார்னிங் எல்லாம் சேர்ந்து உலகப்போரை தொடங்கி வைக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+