ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம்.. அடிமடியில் கைவைக்கும் ஈரான்.. ஸ்டன் ஆன அமெரிக்கா.. போச்சு!
நியூயார்க்: அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா சியோனிஸ்டுகளுக்கு அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக போரில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூட தயாராக இருப்பதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலி யாஸ்திகாஹ் மெஹ்ர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைத்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுப்போம் என்று அவர் கூறி உள்ளார்.
நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் பெஹ்னம் சயீடி கூறுகையில், "எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க ஈரானிடம் பல வழிகள் உள்ளன. அதில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதும் ஒரு வழி" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியமானது?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி ஆகும். இதன் குறுகலான இடத்தில், ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது, மேலும் இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலமுள்ள இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. உலகின் மிக முக்கியமான ஜலசந்தி இதுதான்.
ஏனென்றால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாளுகிறது, இது உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலக எண்ணெய் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதை தடுக்கப்பட்டால் உலகின் பொருளாதாரம் ஒரு சில வாரங்களில் பாதாளத்திற்கு செல்லும்.
ஈரானால் ஜலசந்தியை மூட முடியுமா?
ஹார்முஸ் ஜலசந்தியை மூட முடியும் என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்த ஜலசந்தியை ஒரு சாலையை மூடுவது போல் மூட முடியாது. ஆனால் வணிகப் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாற்றி, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம். இங்கே இரண்டு ஏவுகணைகளை ஏவினால் போதும்.. போக்குவரத்து சீர்குலையும்.
1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது, ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுதல் வசதிகளை குறிவைத்து தாக்கியது. சீன தயாரிப்பான Silkworm ஏவுகணைகள் மற்றும் அதிவேக படகுகள் மூலம் ஈரான் இங்கே தாக்கியது. இந்த நடவடிக்கைகள் ஜலசந்தியை முழுமையாக தடுக்கவில்லை, ஆனால் கப்பல் காப்பீட்டு பிரீமியங்களை கூர்மையாக அதிகரித்தது மற்றும் கடல் போக்குவரத்தை தாமதப்படுத்தியது. இதனால் கடுமையான பொருளாதாரம் சரிந்தது.
2012 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஜலசந்தியை ஒரே கட்டமாக இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக இந்த பகுதியை மூட முயற்சிக்கலாம். ஈரான் குறைவான தாக்குதல்களுடன் தொடங்கி காலப்போக்கில் அதிக வன்முறைக்கு செல்லலாம் . இதன் மூலம் அங்கே போக்குவரத்தை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஈரான் என்னவெல்லாம் செய்ய முடியும்?
ஈரான் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த ஜலசந்தியை முடக்க முடியும்.
ஜலசந்தியில் நுழையும் கப்பல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாமல் கப்பல் போக்குவரத்துக்கு ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பது. கப்பல்களை பயமுறுத்துவது.
ஜலசந்தியில் அல்லது பாரசீக வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்கள் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என்று வெளிப்படையாக அறிவிப்பது. இதன் மூலம் கப்பல்களை பயமுறுத்துவது.
ஜலசந்தியில் அல்லது வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்களை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்துவது.
ஜலசந்தி மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளை பயன்படுத்துவது.
நீர்மூழ்கிக் கப்பல்கள், மேற்பரப்பு கப்பல்கள், கரையோர ஏவுகணைகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி ஜலசந்திக்கு வெளியே உள்ள வெளிநாட்டு கடற்படைக் கப்பல்களைத் தாக்குவது. இதனால் கப்பல்கள் அங்கே செல்லாமல் தவிர்க்கும். இது மிகப்பெரிய பொருளாதார சரிவிற்கு வழிவகுக்கும்.
இப்படி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதைக்கு எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டுள்ளதால் அடுத்து இதில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications