நான் இருந்திருந்தால் கதையே வேறு.. ஆப்கானை கைப்பற்றும் தாலிபான்.. அதிபர் பிடன் மீது பாயும் டிரம்ப்!
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் விதம் தவறானது, நான் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை முறையாக மேற்கொண்டு இருப்பேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நொடியில் இருந்து அங்கு தாலிபான்கள் வெற்றிபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நகரங்களை தாலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகிறது. அதிலும் தற்போது கந்தகார், லஸ்கர் கா உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளன.
இன்னும் சில வாரங்களில் தலைநகர் காபுலையும் தாலிபான்கள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்ததை விட வேகமாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் மொத்தமாக தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

விமர்சனம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் இந்த வெற்றி காரணமாக அமெரிக்கா மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் பிடன் செயல்படும் விதமும், அவர் படைகளை வெளியேற்றும் விதமும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசை அமெரிக்க படைகளும் அதிபர் பிடனும் கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப்
இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதிபர் பிடன் இதில் எடுத்த நிலைப்பாடுகள் தவறானது, மிக வேகமாக பிடன் படைகளை வாபஸ் வாங்கிவிட்டார் என்று டிரம்ப் விமர்சனம் வைத்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இவ்வளவு வேகமாக முன்னேறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவசர அவசரமாக பிடன் படைகளை வாபஸ் வாங்கிவிட்டார்.

வாபஸ்
ஆகஸ்ட் 31ம் தேதிதான் படைகளை வாபஸ் வாங்க வேண்டும். ஆனால் பிடன் அதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட மொத்தமாக படைகளை வாபஸ் வாங்கிவிட்டார். எல்லாம் முடிந்துவிட்டது. நான் இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. நான் படைகளை இன்னும் வெற்றிகரமாக, பாதுகாப்பான முறையில் வாபஸ் வாங்கி இருப்பேன். நான் அதிபராக இருந்திருந்தால் எந்த கண்டிஷனும் போடாமல் படைகளை வாபஸ் வாங்கி இருக்க மாட்டேன்.

கட்டுப்பாடு
தாலிபான்களுக்கு குறிப்பிட்ட சில கண்டிஷன்களை போட்டுவிட்டுதான் நான் படைகளை வாபஸ் வாங்கி இருப்பேன். இது தொடர்பாக நான் நேரடியாக தாலிபான் தலைவர்களிடம் பேசி இருப்பேன். அவர்களுக்கு சூழ்நிலையை புரிய வைத்து இருப்பேன். நான் இருந்திருந்தால் சூழ்நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். சூழ்நிலையை தாலிபான்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள். பிடன் அதில் தவறிவிட்டார், என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்
முன்னதாக டிரம்ப் அதிபராக இருந்த போதுதான் தாலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. தோஹாவில் கடந்த 2020ல் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில்தான் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவை எடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்க படைகள் வாபஸ் வாங்கிய விதம் சரியில்லை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

தேதி மாற்றம்
முதலில் போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் மே 1ம் தேதி 2021க்குள் படைகளை வாபஸ் வாங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதன்பின் புதிய அதிபர் பிடன் இந்த தேதியை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதியே படைகளை வாபஸ் வாங்கி விடுவோம் என்று அறிவித்தார். மாறாக தாலிபான்கள் அமெரிக்கா மீதோ அதன் நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்த கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போடப்பட்டது.

கைப்பற்றுகிறது
அதோடு அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளை தாலிபான்கள் ஆதரிக்க கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தாலிபான்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் தாலிபான்கள் இந்த பேச்சுவார்த்தை கட்டுப்பாடுகளை மதிக்காமல் வேகமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications