உங்கள் கைகளில் கறை உள்ளது! சீனா - பாகிஸ்தானை ஐநாவில் கடுமையாக தாக்கிய இந்தியா.. பரபர பேச்சு!
நியூயார்க்: ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இன்று பாகிஸ்தானையும், சீனாவையும் விமர்சனம் செய்து
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
Recommended Video
ஐநா பொதுக்குழு கூட்டத்தின் 77வது சந்திப்பு தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. எல்லா வருடமும் செப்டம்பர் மாதம் இந்த கூட்டம் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது நடக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இந்தியா சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐநா தடை விதிப்பதை சீனா "வீட்டோ" அதிகாரம் மூலம் தடுப்பதற்கு எதிராக இன்று இந்தியா கடுமையான கருத்துக்களை எடுத்து வைத்தது.

என்ன சொன்னது?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது கருத்தில், உங்களின் எந்த விதமான முன்னெடுப்பும், நீங்கள் விதிக்கும் தடைகளும், நீங்கள் ஏற்கனவே செய்த தவறுகளை மறைத்துவிடாது. உங்கள் கைகளில் இருக்கும் ரத்த கரையை உங்களால் மறைக்க முடியாது. தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள், தீவிரவாத்திற்கு ஆதரவாக ஐநாவில் பேசும் நாடுகள் மக்களின் பாதுகாப்பு குறைத்து பேச முடியாது. அவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கே எதிராகத்தான் முடியும்.

தீவிரவாதிகள்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சில தீவிரவாதிகளுக்கு தடை கூட பெற விடாமல் சிலர் பாதுகாக்கிறார்கள். எல்லை கடந்த தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக 100 சதவிகித எதிர்ப்பை இந்தியா காட்டி வருகிறது. இதில் நாங்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். தீவிரவாதத்திற்கு எதிராக எந்த விதமான சகிப்புத்தன்மையையும் நாங்கள் காட்ட முடியாது. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சீனா
ஐநாவில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஐநாவில் இந்தியா பல முறை தீர்மானங்களை கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இதை சீனா ஒவ்வொரு முறையும் தடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய எதிர்ப்பு
இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளை ஆதரிக்கும் அளவிற்கு கூட சீனா சென்றுவிட்டது. முன்னதாக ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் இந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவருமான அப்துல் ரவூப் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் கோரிக்கை வைத்தபோது அந்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சீனாவை இன்று அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கண்டித்து உள்ளார்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications