அமெரிக்காவில் 8 அடி உயர மகாத்மா காந்தி சிலை சேதம்- இந்திய தூதரகம் கடும் கண்டனம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகாத்மா காந்தியடிகளின் 8 அடி உயர சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1986-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டது. காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை சார்பில் இங்கு 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைதான் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் யூனியன் சதுக்கம் பகுதியில் மகாத்மா காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்று (சனிக்கிழமை) மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
மகாத்மா காந்தியடிகள் சிலையை சேதப்படுத்திய இழிவான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இச்சம்பவம் குறித்து அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மகாத்மா காந்தியடிகள் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா போலீசார் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தினர் காந்தி சிலையை அமெரிக்காவில் சேதப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications