ஒரே வீட்டில் 90 பாம்புகள்.. அத்தனையும் விஷம்.. திகிலை கிளப்பும் ஹவுஸ் ஓனர்.. எங்கேன்னு பாருங்க
ஒரே வீட்டில் 90 விஷ பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
நியூயார்க்: ஒரு வீட்டில் 90 பாம்புகள் இருந்ததாம்.. அத்தனை பாம்புகளையும் வெறும் 4 மணி நேரத்தில் ஒருவர் பிடித்து விட்டார்.. அத்தனை பாம்புகளும் விஷப்பாம்புகளாம்.. இந்த செய்திதான் அமெரிக்கா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் அல் வுல்ஃப்... இவர் ஒரு விலங்குகள் நல ஆர்வலர்.. எங்காவது உயிரினங்கள் இன்னலுற்று கிடந்தால் துடித்து போய்விடுவார்.
பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை மீட்டு, அவைகளை கொண்டு போய் பாதுகாப்பாக வனங்களில் விட்டு வருகிறார்... இப்படியே கடந்த 32 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்,.

இந்நிலையில் சாண்டா ரோசா பகுதியில் ஒரு வீட்டில் பாம்புகள் இருப்பதாக அல் வுல்ஃபிற்கு ஒரு போன் வந்தது.. அதனால் அந்த வீட்டை நோக்கி சென்றார் அல்வுல்ஃப்... வீடு முழுக்க தேடி தேடி பார்த்தார்.. ஆனால், பாம்பு எதுவும் தென்படவில்லை.
இதையடுத்து அந்த வீட்டுக்கு கீழ் பகுதியில் பாம்புகள் இருப்பது போல சந்தேகம் வரவும், அங்கு ஆய்வு செய்தார்.. அப்போது, 90க்கு மேற்பட்ட பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்... அத்தனை பாம்புகளும் விஷபாம்புகள்.. உடனடியாக பாம்பை பிடிக்கும் வேலையில் இறங்கினார்.. தொடர்ந்து 4 மணி நேரம் போராடி அத்தனை பாம்புகளையும் எடுத்துவிட்டார்...
இந்த வீடு இவருக்கு புதிது இல்லை.. ஏற்கனவே இதே வீட்டிற்கு அவர் வந்து போயுள்ளார்.. கடந்த அக்டோபர் 2ம் தேதியும் இதுபோலவே வீட்டில் பாம்பு இருப்பதாக போன் வந்துள்ளது.. அப்போது வந்தபோது 22 விஷப்பாம்புகளையும், 59 பாம்பு குட்டிகளையும் எடுத்து கொண்டு போனார்.. அதற்கு பிறகு மறுபடியும் வந்தார்.. 11 பாம்புகளை பிடித்து சென்றார்.. இப்போது மீண்டும் வந்துள்ளார்.. மொத்தம் 90 விஷபாம்புகளை பிடித்து கொண்டு போனார்.. அத்தனையும் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பாக விட்டுவிட்டார்.
ஆனால் மறுபடியும் பாம்பு வீட்டிற்குள் வந்துவிடுமோ என்று அந்த ஹவுஸ் ஓனர் பயந்து கொண்டு இருக்கிறாராம்.. நிம்மதியாக ஒரு நாள் கூட தூங்க முடியவில்லை என்று அனைவரிடமும் புலம்பி கொண்டே இருக்கிறாராம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications