விபச்சாரத்தில் நேபாள பெண்கள்? மனைவிகளுக்கு சீனாவில் வந்த பஞ்சம்.. மனித கடத்தலை கற்பனை செய்ய முடியலயே
நியூயார்க்: நேபாளத்தில் சமீபத்தில் ஒரு பிரச்சனை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. சில சீனர்கள், நேபாள பெண்களை திருமணத்திற்காக வாங்கி சென்று, சீனாவில் விற்பனை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.. மணப்பெண்ணை விலைக்கு வாங்கும் இந்த செயல்தான், உலக மக்களை அதிர செய்து வருகிறது.. மனித உரிமை மீறல் என்ற காட்டமான விமர்சனத்தையும் பெற்று வருகிறது...!!
சீனாவில் ஆண்களின் எண்ணிக்கையை பெண்களைவிட அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கடந்த காலத்தில் அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கை ஆகும்,..

அதாவது ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டமாக இருந்தது. இதனால் பல ஆண்டுகள், ஆண்கள் பெண்களைவிட அதிகமாக பிறந்தனர்.
சீனாவில் பெண்கள் எண்ணிக்கை
தற்போதைய தகவல்களின்படி, சுமார் 100 பெண்களுக்கு 104 ஆண்கள் உள்ளனர். இதனால் சீன ஆண்களுக்கு நாட்டில் திருமணத்திற்கு பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது... இந்த சான்ஸை சில கும்பல்கள் தவறாக பயன்படுத்தி கொள்ள முனைந்துள்ளன..
அதாவது நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை சீனாவில் கடத்த முயற்சிக்கிறார்களாம்.. குறிப்பாக, நேபாள கிராமங்களில் வசிக்கும் வறுமையில் உள்ள பெண்கள், இளம் பெண்கள் போன்றோருக்கு குறி வைத்து, இவர்களை அந்த கும்பல்கள் கடத்துகிறார்களாம்..
ஆனால் தங்கள் குட்டு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, சீனாவில் நல்ல வாழ்க்கை, வேலை வாய்ப்பு, பெரிய சம்பளம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை அப்பெண்களிடம் வாக்குறுதிகளாக தருகிறார்களாம்..
வறுமையில் நேபாள இளம்பெண்கள்
ஏற்கனவே வறுமையில் உள்ள இளம்பெண்களுக்கு இப்படியான வாய்ப்புகள் ஈர்க்க செய்கின்றன.. இதற்கு சம்மதிக்கும் பெண்களை, அந்த கும்பல் சீனாவில் திருமணம் செய்வது போல நடித்து, சுற்றுலா விசா மூலம் அவர்களை நாட்டை விட்டு கடத்தி செல்கிறார்கள்..
சீனாவுக்கு வந்த பிறகு, சில பெண்கள் பலப்பல ஆண்களுக்கு விற்கப்படுகிறார்கள்... இந்த பெண்களை விலைக்கு வாங்கி செல்லும் ஆண்கள், வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள்.. பெரிய வேலை, பெரிய சம்பளம் கிடைக்கும் என்ற ஆசியல் செல்லும் அந்த பெண்கள், வீடுகளில் அடைபட்டு, உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் பாலியல் தொழில்களில் ஈடுபட வலியுறுத்தப்படுகிறார்கள்.
சீனாவில் ஏலம் விடப்பட்ட பெண்கள்
பெரும்பாலும், மேட்ரிமோனி போன்ற வெப்சைட்களில் நேபாள பெண்களை விற்பனைக்கு விடப்படுகிறார்கள்.. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஏலம் விடுவது தொடர்பான சில நேரலை வீடியோக்களும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை தந்துள்ளது.. இது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது..
இந்நிலையில்தான், இந்த சம்பவங்களை தடுக்க நேபாள காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. சமீபத்தில் காட்மாண்டு ஏர்போர்ட்டில் சில பெண்களை சீனர்களுக்கு மணப்பெண் என்ற பெயரில் அழைத்து செல்லும்போது, அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.. மேலும் இதில் சம்பந்தப்பட்ட சில சீனர்கள், அவர்களுக்கு உதவிய நேபாள தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித கடத்தல் சம்பவம்
தற்போது நேபாள அரசு, இந்தக் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில சீனர்களை விசா விதிகள் மீறியதாக கூறி நாடு வெளியேற்றியுள்ளது. ஆனால் சில பெண்களை மீட்டெடுப்பது சிரமமாக இருந்ததால், முழுமையாக அனைவரையும் பாதுகாக்க முடியவில்லையாம்..
சீன தூதரகமும், தன்னுடைய குடிமக்களுக்கு அட்வைஸ் தந்துள்ளது.. இதுபோன்று மணமகள் வாங்கும் செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள். இது சட்டத்திற்கு எதிரானது. இதனால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்" என்று அலர்ட் செய்துள்ளது..
இதற்கெல்லாம் காரணம், சீனாவில் மனைவிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதுதான்.. சில ஆண்கள் வெளிநாட்டிலிருந்து திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். எனினும், இதெல்லாம் மனித உரிமை மீறல், சட்டவிரோத செயல்கள் மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு முரண்பாடானது என்றும் கண்டனங்கள் பெருகி கொண்டிருக்கின்றன...!!!












Click it and Unblock the Notifications