டிரம்ப்பையே அலறவிட்ட மம்தானி.. நியூயார்க்கில் மேயர் தேர்தல் விறுவிறு! உற்று பார்க்கும் அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வரும் சூழலில், வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கையும் அங்கு நடைபெறுகிறது. அங்கு ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானி போட்டியிடும் நிலையில், அவர் வெல்லவே கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் என்றால் அது நியூயார்க் தான்.. பொருளாதார அடிப்படையில் வேறு எந்தவொரு நகரத்தையும் விட மிகப் பெரிய நகரமாக நியூயார்க் இருக்கிறது. அந்த நகரத்தின் 111வது மேயரை தேர்வு செய்ய இப்போது அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தினம் அதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நியூயார்க் தேர்தல்
உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களையும் போலவே இதிலும் வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும். இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 7.15க்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த முறை நியூயார்க் தேர்தலில் மூன்று முனைப் போட்டி இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிடுகிறார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
யார் முன்னிலை
வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது வரை வெளியான சர்வேக்களில் மம்தானிக்கு முன்னிலை இருக்கிறது. அவருக்குப் பிறகு சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ வருகிறார். மூன்றாவது இடத்தில் தான் ட்ரம்ப் கட்சி வருகிறது.
டிரம்ப் திட்டவட்டம்
இந்தத் தேர்தலை டிரம்ப் கூட உற்றுக் கவனித்து வருகிறார். மம்தானி வெல்லவே கூடாது என்பதில் டிரம்ப்பும் மிகத் தெளிவாக இருக்கிறார். வெளிப்படையாகவே மம்தானிக்கு வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்லி வருகிறார். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய நாள் இன்னொரு படி மேலே சென்று, சர்வேக்களில் 2வது இடத்தில் வரும் சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளார். மம்தானியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ட்ரம்ப் தனது கட்சி வேட்பாளரைத் தாண்டி இன்னொருவருக்கு ஆதரவளிக்கிறார்.
நிதி தர மாட்டாராம்
மேலும், தேர்தலில் மம்தானி வெற்றி பெற்றால் பெடரல் அரசின் நிதியைத் தர மாட்டேன் என்றும் கூட வெளிப்படையாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால்.. நான் நியூயார்க்கிற்கு பெடரல் நிதியைத் தர வாய்ப்பில்லை. ஒதுக்க வேண்டிய குறைந்தபட்ச நிதியைத் தவிரக் கூடுதல் நிதியைத் தர மாட்டேன்" என வெளிப்படையாகவே மக்களை மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி மம்தானி வெல்லவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை மம்தானி வென்றால்.. டிரம்ப் வரும் காலங்களில் நியூயார்க் மேயருடன் மோதல் போக்கையே கொண்டிருப்பார் என தெரிகிறது. எனவே, இந்தத் தேர்தலை ஒட்டுமொத்த அமெரிக்காவும் உற்றுக் கவனித்து வருகிறது.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications