இந்தியாவை சீண்டாதீங்க.. பெரிய சிக்கல் வரும்.. குஷியில் சீனா.. டிரம்பிற்கு போன கடும் வார்னிங்
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி, இந்தியாவுடனான தனது உறவை அமெரிக்கா சிதைக்கக் கூடாது என்றும், இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனாவிற்குச் சலுகைகள் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் வரிகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் மீது விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நிக்கி ஹேலி இந்த கருத்தை தெரிவித்தார்.
"இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறுகிறார். ஆனால், ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெயை அதிகம் வாங்கும் சீனாவுக்கு 90 நாள் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவிற்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் இந்தியாவிற்கு அளிக்கவில்லை. சீனாவிற்குச் சலுகை அளித்துவிட்டு, இந்தியாவைப் போன்ற வலுவான கூட்டாளியுடன் உள்ள உறவைச் சிதைக்க வேண்டாம்," என்றும் நிக்கி ஹேலி குறிப்பிட்டார்.

டிரம்ப் இந்தியா மோதல் எச்சரிக்கை
தென் கரோலினாவின் முன்னாள் ஆளுநரான ஹேலி, டிரம்ப்பின் முதல் அதிபர் பதவிக் காலத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றினார். அமெரிக்க நிர்வாகத்தில் கேபினட் மட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெற்றார். டிரம்ப்பிற்கு இவர் மிகவும் நெருக்கமானவர். 2013-ல் 2024 அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அவர் அறிவித்தாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் போட்டியில் இருந்து விலகினார்.
இப்போதும் இவர் டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இந்தியாவுடனான தனது உறவை அமெரிக்கா சிதைக்கக் கூடாது என்றும், இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனாவிற்குச் சலுகைகள் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் என்று நிக்கி எச்சரித்து உள்ளார்.
இந்தியா வர்த்தக அமெரிக்கா
இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக இரு நாடுகளுக்குமான வர்த்தகம் குறைவாகவே உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மேலும் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications