இந்தியாவிற்கு தண்டனை கொடுக்க ரெடி.. ஆனால்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் போடும் திட்டம்.. பின்னணி!
நியூயார்க்: ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும், இந்தியா மீது எந்த கூடுதல் வரிகளையும் விதிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவை அமெரிக்கா தண்டிக்க விரும்பவில்லை. ஆனால் இந்தியா செய்யும் செயல்கள் அப்படி உள்ளன. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை வாங்காமல் தவிர்த்து வருகிறது.

அமெரிக்கா, இந்தியாவுடன் இடையே பிரகாசமான உறவு இருக்க வேண்டும். உக்ரைன் மோதலில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒற்றுமை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா அமெரிக்கா உறவு
ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உலகில் பல எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கத் தேவையில்லை. அது மலிவாகக் கிடைப்பதால் மட்டுமே இந்தியா அதை வாங்குகிறது. ஆனால் அது போருக்கு உதவுகிறது என்பதை இந்தியா உணர வேண்டும் .
யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்புவதில்லை. இதனால்தான் அவர்கள் அதை தள்ளுபடி விலையில் விற்க வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பவனுக்கு பணம் கொடுக்கும் விதமாக இந்தியா இந்த எண்ணெயையை வாங்குகிறது. வேறு வழியில் மலிவான எண்ணெய்யை வாங்க இந்தியா நினைக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்தியா எங்களுடன் இணைந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ரஷ்ய எண்ணெய் தவிர, உலகில் எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் எண்ணெய் வாங்கலாம். இதுதான் எங்கள் நிலைப்பாடு" என்று ரைட் விளக்கினார்.
இந்தியாவிற்கு தண்டனை
அமெரிக்காவிடம் விற்க எண்ணெய் உள்ளது, மற்ற நாடுகளிடமும் உள்ளது. இந்தியாவுக்கு நாங்கள் தண்டனை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம், இந்தியாவுடனான எங்கள் உறவுகளை வளர்க்க விரும்புகிறோம், என்று கூறி உள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும், என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்து இருந்தார்.
இந்தியா எங்களுக்கு முக்கியமான நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான துறைகளில் நாங்கள் நெருங்கிய உறவை கொண்டுள்ளோம். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் உறவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த உறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், குவாட் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்
இந்தியா - அமெரிக்கா மோதல்
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது அபத்தமானது.. இந்தியா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்தும் அதே வேளையில், ஐரோப்பா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.. ஐரோப்பா இப்போதும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதை தடுக்க வேண்டும்.
நாங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், அதிக நடவடிக்கைகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அவர் அதை பரிசீலித்து வருகிறார்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை
இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்தியா மீது இன்னும் ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும்.
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்கா-இந்தியா உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி தேவைகளைப் புரிந்துகொண்டாலும், சலுகை விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது புடினின் போர் முயற்சிகளுக்கு உதவுகிறது. ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியாவின் பணம் உதவுகிறது. இதை இந்தியா நிறுத்த வேண்டும். நாங்கள் ஒரு நல்ல நட்பு நாடுகள் என்றாலும், எல்லாவற்றிலும் 100% ஒத்துப் போவதில்லை. குறிப்பாக எரிசக்தி விஷயத்தில். பிற சப்ளையர்களும் உள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்ப்போம் என நம்புகிறேன், என்று ரூபியோ மேலும் கூறினார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications