ரஷ்யா, புடின் எங்களுக்கு எதிரியல்ல.. இவங்கதான் எங்களுக்கு பெரிய எதிரி.. இந்தியாவை சாடிய டிரம்ப்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் புடின் ரஷ்யாவுடன் நெருக்கமாகி வரும் நிலையில்.. ரஷ்யா எங்களுக்கு எதிரி கிடையாது என்று கூறி உள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவிற்கு கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அதோடு இல்லாமல் ரஷ்யாவுடன் நெருக்கமாக மாற டிரம்ப் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பல பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா போரில் என்ன முடிவாக போகிறது .. இனி என்ன நடக்க போகிறது என்பது நேற்று நடந்த வெள்ளை மாளிகை சம்பவத்திற்கு பின் உறுதியாகிவிட்டது. இனி இந்த விவகாரத்தில் ரஷ்யாதான் உச்சத்தில் இருக்க போகிறது. அமெரிக்காவை நம்பி அண்ணன் ரஷ்யாவை பகைத்துக்கொண்ட உக்ரைன் இப்போது வேறு வழியில்லாமல் தற்போது சர்வதேச மேடையில் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.
இப்போது அமெரிக்காவும் ரஷ்யாவின் பக்கம் வந்து இருப்பது ரஷ்யாவிற்கு சாதகமாக மாறி உள்ளது. ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. இது பலரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் இதில் எதிர்பார்க்காத விஷயம்.. உக்ரைனுக்கு எதிராக அமெரிக்காவும் வாக்களித்துள்ளது. நேட்டோ தொடர்பான ஒரு விவகாரத்தில்.. அல்லது ரஷ்யா தொடர்பான ஒரு விவகாரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஐநாவில் அமெரிக்கா வாக்களிப்பது இதுவே முதல்முறை.
மொத்த ஐரோப்பா கண்டத்தையும் இந்த விவகாரம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்கு உலக நாடுகள் எல்லாம் அமெரிக்கா - ரஷ்யா கரம் கோர்த்ததை பார்த்து கடுப்பாகி உள்ளன.
இந்தியா மீது சாடல்
இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் புடின் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ரஷ்யா பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. புடின், ரஷ்யா நமது எதிரி இல்லை. நமது உண்மையான எதிரி புலம்பெயர்ந்தவர்கள்தான். அமெரிக்காவிற்கு கூட்டமாக குடியேறும் நபர்கள்தான் நமது பிரச்சனை.
அவர்கள் செய்யும் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோதமாக குடியேறும் இவர்கள்தான் நமது பிரச்சனைக்கு காரணம். இவர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி கவலைப்படுவதற்கும் அதிக நேரம் செலவிட வேண்டும், என்று டிரம்ப் விமர்சனம் வைத்துள்ளார். இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் கூட்டமாக குடியேறும் நிலையில் டிரம்ப் வைத்த இந்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து
அமெரிக்காவில் இருந்து 4 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதுவரை 4 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்.. 5ம் கட்டமாக அடுத்த வாரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். கடந்த வாரம் 4ம் கட்டமாக 12 பேர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 15 நாட்களில் 334 இந்தியர்கள் அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த வாரம் தரையிறங்கியது.
இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பாக நடத்தப்படும் கடைகள், உணவகங்களில் ரெய்டுகளை நடத்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இது போன்ற உணவகங்களில், கடைகளில் இந்திய மாணவர்கள்தான் வேலை பார்ப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள். அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள். சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.
இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள். இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க சட்டப்படி மாணவர் விசா வாங்கியவர்கள்.. பார்ட் டைம் வேலை பார்க்க முடியாது. ஆனால் இதை மீறி இந்திய கடைகளில் இவர்கள் வேலை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக உணவகங்களில், மால்களில் பலர் வேலை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை கண்டுபிடிக்க ரெய்டு நடத்தும் திட்டத்தில் அந்நாட்டு அதிகாரிகள் உள்ளனர். அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும். சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும். எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.. பணிகள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications