டிரம்ப் என்ன தடை போட்டால் என்ன? இந்தியாவுடன் ரஷ்யா போட்ட தரமான டீல்.. அமெரிக்கா திக்கி திணற போகுது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய தடைகளை மீறி, இந்தியாவிற்கு அதிக அளவில் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாவதை உறுதிசெய்ய, ரஷ்யா இப்போதே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயின் உலகின் இரண்டாவது பெரிய கொள்முதல் நாடாக மாறியுள்ளது.

ரஷ்ய மலிவு எண்ணெயை இந்தியா நம்பியிருப்பதை நிறுத்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருவதால், அமெரிக்கா-இந்தியா உறவுகள் அண்மைய மாதங்களில் சரிந்துள்ளன. விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால், ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் 25% அபராத வரியை விதித்தார்.

NATO Russia

இந்தியா மீது வரி டிரம்ப்

ஆனால், இந்தியாவோ இதை ஒரு இறையாண்மை சார்ந்த பிரச்சினையாகக் கருதி பின்வாங்க மறுத்தது. தனது எரிசக்தி கொள்கைகளை மூன்றாம் நாடுகள் கட்டளையிட முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் பிறகு இரு நாடுகளிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. கடந்த வாரம், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, இந்தியாவிற்கு 500% வரி விதிப்போம் என்றும், இந்தியா தலைமையிலான பல உலகளாவிய முன்முயற்சிகளிலிருந்து விலகுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அழுத்தத்தை அதிகரித்தது.

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு மலிவு எண்ணெய் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட சமீபத்திய அமெரிக்கத் தடைகளின் செயல்திறன் குறித்த கேள்விகள் எழுந்தன. நவம்பர் மாதத்தின் இறுதியிலிருந்து, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களும், இந்தியாவிற்கு அதிக அளவில் எண்ணெய் விற்பனை செய்பவர்களுமான ரோஸ்னெஃப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனைத்து நிறுவனங்கள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களையும் அமெரிக்கத் தடைகள் இலக்கு வைத்தன.

தொடரும் அமெரிக்க தடைகள்

இந்தத் தடைகள் ஆரம்பத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பொதுவாக ரோஸ்னெஃப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டு வந்த இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, ஒரு நாளைக்கு சராசரியாக 1.7 மில்லியன் பேரல்களிலிருந்து டிசம்பர் மாதத்தில் சுமார் 1.2 மில்லியன் பேரல்களாகக் குறைந்தது. இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சரிவைக் குறிக்கிறது.

இருப்பினும், இந்தத் தடைகள் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான நீண்டகாலச் சார்புக்கு முடிவைக் ஏற்படுத்தவில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தடைகளுக்குப் பிறகும், இந்தியாவின் ஏழு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் நான்கு இன்னும் முக்கியமாக ரஷ்ய எண்ணெயை நம்பியே இயங்குகின்றன.

தொடரும் ரஷ்ய உறவு

அமெரிக்கத் தடைகளை இந்தியா போன்ற நாடுகள் கடந்து செல்வதற்கு வசதியாக, ரஷ்யா ஏற்கனவே அதன் விநியோகச் சங்கிலியை மறுசீரமைக்கத் தொடங்கியதற்கான அறிகுறிகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கச்சா எண்ணெய் ரோஸ்னெஃப்ட் அல்லது லுகோயில் அல்லாத ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்டால், அந்த சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டது அல்ல. அதன்படி அமெரிக்காவின் புதிய தடைகளை மீறி, இந்தியாவிற்கு அதிக அளவில் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாவதை உறுதிசெய்ய, ரஷ்யா இப்போதே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதித் தரவுகள், டிசம்பர் மாதத்திற்குள் பல புதிய ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உருவானதை காட்டுகின்றன. இவர்கள், ரஷ்ய எண்ணெய் ஜாம்பவான்களுக்கும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் இடையே மறைமுகத் தரகர்களாக செயல்பட நோக்கம் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.

இந்த புதிய நிறுவனங்கள் ஏற்கனவே ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டதாகவும், முழு விநியோகச் சங்கிலியும் மறுசீரமைக்கப்பட்டு, பெரும்பாலான பேரல்கள் ரோஸ்னெஃப்ட் அல்லது லுகோயில் அல்லாத நிறுவனங்களால் வழங்கப்படும் என்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே ஆகும் என்றும் ரஷ்யா தரப்பு தெரிவிக்கிறது . கடந்த டிசம்பரில் இந்தியாவிற்குச் சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க எதிர்ப்பு இருந்தபோதிலும் இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் விநியோகம் தடங்கலின்றி தொடரும் என்று உறுதியளித்தார். இந்திய அரசும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து அரசு அல்லது தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எந்த நேரடி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை; மாறாக, அவற்றின் செயல்பாடுகளுக்குச் சிறந்த முறையில் செயல்படவே ஊக்குவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+