'ஐ ஆம் சாரி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூகுள் சுந்தர் பிச்சை.. மலைத்த ஊழியர்கள்.. காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 12 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக அந்த ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் தற்போது ஆட்குறைப்பு பணியில் இறங்கியுள்ளன. முதலில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 18 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் முதல் ஸ்விக்கி, சொமாட்டோ வரை பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை விடுவித்தது. இந்நிலையில் கூகுளும் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்த நிலையில் இன்று 12 ஆயிரம் ஊழியர்களுக்கும் பணிநீக்கம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, "இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு இந்த விடுவிப்பு செயல்முறை முடிவடைய சில நாட்கள் எடுக்கும்.

வருத்தம்

வருத்தம்

கடினமாக உழைத்த மற்றும் நம்ப முடியாத திறமை வாய்ந்த சிலரிடம் விடைபெறுவது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மாற்றங்கள் கூகுள் செய்பவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற உண்மை என்னை மிகவும் பாதிக்கிறது. இந்த முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி என்பது வியப்பளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கான உந்து சக்தியாக நீங்கள் இருந்தீர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் யதார்த்தத்தில் பயணிக்க வேண்டும். இந்த இழப்பு மூலம் நாங்கள் அதற்கு ஏற்ப பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

சவால்

சவால்

தற்போது எங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. இந்த சவாலை நாங்கள் AI தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே நாங்கள் சவால்களை நல்ல முறையில் எதிர்கொண்டு மேலும் முன்னோக்கி செல்வோம். அதேபோல இந்த 12 ஆயிரம் கூகுள் ஊழியர்களுக்கு 60 நாட்கள் நோட்டீஸ் பீரியட் இருக்கும். இந்த நாட்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படும். பணிநீக்க தொகை வழங்கப்படுவதோடு குறைந்தபட்சம் 16 வாரங்களுக்கு GSU வெஸ்டிங் விரைவுப்படுத்தப்படும். மேலும் கடந்த ஆண்டு (2022) நிலுவையில் உள்ள போனஸ் தொகையும் பெண்டிங் உள்ள விடுமுறை நேரமும் வழங்கப்படும்.

 ஆதரவு

ஆதரவு


இத்துடன் இவர்களுக்கு சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் குடியேற்ற ஆதரவையும் கூகுள் வழங்கும். அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து பணியாற்றுபவர்கள் அந்நாட்டின் சட்டதிட்டத்தின்படி விடுவிக்கப்படுவார்கள். இது அனைத்தும் 'சாத்தியமற்றவற்றை ஆரோக்கியமாக புறக்கணிப்பதன்' தொடர்ச்சியாகும். இந்த கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் மீதமிருக்கும் நாட்களில் ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலையை செய்ய தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

 ஊதியம்

ஊதியம்

தொடர் வேலையிழப்புகள் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை தீவிரமடையும் என்றும், இது இளைஞர்கள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளை கடுமையாக பாதிக்கலாம் எனவும் பொருளாதார வல்லுநனர்கள் கூறியுள்ளனர். இந்த வேலையிழப்புகள் காரணமாக சந்தையில் தொழிலாளர்களின் ஊதியம் கணிசமாக குறைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+