காட்டு முடி! பூமிக்கு வரும் அழகு தேவதை சுனிதா! விண்வெளியில் மாதவிடாய் வந்தால் என்ன செய்வார்கள்?
நியூயார்க்: பூமியிலேயே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது மிகவும் டென்ஷனாகவும் வலியானதாகவும் இருக்கும் நிலையில் விண்வெளியில் தங்கியிருக்கும் பெண் வீராங்கனைகள் மாதவிடாய் சுழற்சியின் போது எப்படி சமாளித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த துறையில் இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் என்பது துயரம் மிகுந்ததாகவே உள்ளது. மாதவிடாயின் போது அடி வயிற்று வலியால் ஏற்படும் பிரச்சினை, மன பாரம், மனநிலை மாற்றம், நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம், அதிலும் ரத்த கறை துணியில் பட்டுவிட்டதா என அவ்வப்போது சோதிக்க வேண்டிய நிலை... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அந்த காலத்தில் துணி வைத்திருந்தார்கள், பிறகு நாப்கின்கள் வந்தன. அதைவிட நவீனமயமான டாம்பான்கள் வந்துவிட்டன. இவற்றை பெண்களின் பிறப்புறுப்பில் விட்டுக் கொண்டால் போதும். அது நிரம்பியதும் அதை கழிப்பறையில் எடுத்து ஊற்றிவிட்டு வாஷ் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
நாப்கின்
இதனால் நாப்கின் வைக்கும் போது ஏற்படும் அசவுகரியம் இல்லை. தொடைகளில் நாப்கின்கள் உரசி உரசி rashes வருவதில்லை. எனினும் டாம்பான்களை மறந்துவிட்டால் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள்.
பெண்களுக்கு கஷ்டம்
இப்படி பூமியில் இருக்கும் பெண்களே கஷ்டப்படும் போது விண்வெளிக்கு நாள் கணக்கில் தங்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தை எப்படி சமாளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுனிதா வில்லியம்ஸுக்கு தற்போது 59 வயதானாலும் அவர் ஏற்கெனவே 322 நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்.
புவி ஈர்ப்பு சக்தி
விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லை என்பதால் அவர்களால் விண்வெளியில் பறக்கத்தான் முடியும், நடக்க முடியாது. இதனால் அவர்களது ரத்தம் மண்டைக்கு ஏறும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பெண் வீராங்கனைகள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
முதல் பெண் வீராங்கனை
1963 ஆம் ஆண்டு வேலன்டினா டெரேஷ்கோவா என்பவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என அறியப்படுகிறார். அவரை தொடர்ந்து மேலும் 99 பேர் சென்றுள்ளனர். இதுகுறித்து நாசாவை சேர்ந்த ரியா ஷெட்டான் என்பவர் ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ளார்.
பிரச்சினைன்னா பிரச்சினைதான்
அவர் தனது விளக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரச்சினை என நினைத்தால் மட்டுமே ஒரு விஷயம் நமக்கு பிரச்சினையாக மாறுகிறது. ஆனால் எதையும் வெல்வோம் என்ற மனநிலை இருந்தால் எதையும் சமாளிக்கலாம். விண்வெளியில் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களை பூமிக்கு கொண்டு வரலாம். அதுதான் பிரச்சினை!
மாதவிடாய் எல்லாம் பிரச்சினையா
ஆனால் மாதவிடாய் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, விண்வெளியில் புவி ஈர்ப்பு இல்லாததால் மாதவிடாய் ரத்தம் எப்படி வரும் என்பதை பலர் வெவ்வேறு மாதிரி கற்பனை செய்திருப்பர். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. விண்வெளியில் மாதவிடாய் வந்தாலும் பரவாயில்லை என பெண்கள் நினைத்தால், அதை சமாளித்துவிடுவார்கள்.
நடைமுறை சிக்கல்கள் இருந்தால்
பெண் வீராங்கனைகள் மாதவிடாயை தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் பயணத்தின் போது இடை நிறுத்திக் கொள்ளலாம். சுகாதாரம், டாம்பான்களால் விண்வெளியில் ஏற்படும் எடை அதிகரிப்பு, சானிட்டரி பொருட்கள், குறைந்தபட்ச தண்ணீர் வளம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு சிலர் பயணத்தை இடைநிறுத்திக் கொள்ளலாம்.
ஹார்மோன் மாத்திரை
மாதவிடாயை தடுக்கும் வகையிலான ஹார்மோன் தடை மாத்திரைகளை உட்கொள்வார்கள். இந்த மாத்திரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை கட்டுப்படுத்தி மாதவிடாய் உதிரப்போக்கை தடுத்து நிறுத்திவிடும். இந்த மாத்திரை பாதுகாப்பானது. ஒரு சில வீராங்கனைகள் தங்களுக்கு ரத்த போக்கு வந்தாலும் பரவாயில்லை என நினைத்தால் அவர்கள் பூமியில் இருப்பதை போன்று சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதெல்லாமே பெண் வீராங்கனைகளின் தனிப்பட்ட விருப்பம் என ரியா ஷெட்டான் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications