நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒருத்தரும்" தப்ப முடியாது.. வந்தாச்சு "டைம்கேம்ப்".. Work From Home-ல் சிக்கிய பெண்.. அய்யோ இப்படியா

வீட்டிலிருந்தே பணிபுரிந்த பெண்ணை சஸ்பெண்ட் செய்ததுடன், அபராதமும் விதித்துள்ளது ஒரு நிறுவனம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: புகழ்பெற்ற கம்பெனி ஒன்றில், வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்துள்ளார் பெண் ஒருவர்.. ஆனால், அவரை திடீரென அந்த நிறுவனம் சஸ்பெண்ட் செய்துவிட்டது. ஏன் தெரியுமா?

ஊழியர்களை கண்காணிக்க, அனைத்து நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்துவது என்பது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.. ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்தசமயம், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்தார்கள்..

அதனால், இவர்களை கண்காணிக்க முடியாமல் போனாலும், பணிகள் அனைத்து துறையிலும் நடந்து கொண்டுதான் இருந்தது.. எனினும் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணிக்க முடியாமல் பலரும் திணறினர்..

பெட்ரூமில் ஒரே அக்கப்போர்.. விழித்த காதலன்.. கிச்சனுக்கு ஓடிய பெண்.. பெட்ரூமில் ஒரே அக்கப்போர்.. விழித்த காதலன்.. கிச்சனுக்கு ஓடிய பெண்..

 ஆப்பிள் ஊபர்

ஆப்பிள் ஊபர்

இவர்களை எப்படி கண்காணிப்பது என்ற குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டபோது, டெலிபர்பாமென்ஸ் என்ற பிபிஓ நிறுவனம் மட்டும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டது.. இந்த நிறுவனம் ஆப்பிள், கூகுள், உபர் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பிபிஓ சேவைகளை அளித்து வருகிறது... இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அலுவலகத்தில் சுமார் 3.8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்... இதில், சுமார் 2.4 லட்சம் ஊழியர்கள் தொற்று காரணமாக கடந்த வருடம் வீட்டில் இருந்து பணியாற்றினார்கள்..

 AI வந்தாச்சு

AI வந்தாச்சு

இந்த ஊழியர்களை அவர்கள் வீட்டிலிருந்து AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு கண்காணிக்க போவதாக அப்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. எனினும், பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் சமீபகாலமாக அதிகமாகிவிட்டதால், அதை தடுத்து நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. அந்தவகையில், ஒரு சிலரது வேலைப்பளுவானது, நேரம் நேரில் அலுவலகம் சென்று செய்வதை விட அதிகமாகிவிட்டது.. மேலும் சிலர் வேலை செய்யாமல், வெறுமனே கணக்கு காட்டி பழகினர்..

 கையும் களவுமாக

கையும் களவுமாக

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வீட்டில் உள்ளவர்களையும் வீட்டில் உள்ள பணிகளையும் பார்த்துக்கொண்டே வேலை செய்யும் வாய்ப்பு கிடைப்பதால், சிலர் அதை துஷ்பிரயோகமும் செய்வதாக தகவல்கள் கிளம்பின. இதனால் ட்விட்டர் போன்ற பெரும்பாலான நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்த ஊழியர்களை, மறுபடியும் ஆபீசுக்கே திரும்ப சொன்னது. சில நிறுவனங்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன... அந்தவகையில், பிரிட்டிஷ் கொலம்பியாவை மையமாக கொண்ட ஒரு நிறுவனம், வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதித்திருக்கிறது..

 ஷிப்ட் டைமிங்

ஷிப்ட் டைமிங்

வீட்டில் இருந்தே வேலை என்பதால் பலரும் இந்த வேலையில் ஆர்வம் காட்டி உள்ளனர்.. ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் தங்கள் ஷிப்ட் நேரத்தில் வேலை செய்யாமல் இருப்பதை கண்டறிய, ஒரு ஸ்பெஷல் சாப்ட்வேரை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.. அந்த சாப்ட்வேர்க்கு "டைம்கேம்ப்" என்று பெயர்.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை, அந்த நிறுவனம் சைலண்ட்டாக கண்காணித்துள்ளது. அப்போதுதான் ஒரு பெண் வசமாக சிக்கினார்.. அவர் பெயர் கார்லீ பெஸ்ஸே.. வேலை செய்யாமல், ஜாலியாக டைம்பாஸ் செய்து கொண்டிருந்தாராம்.. அந்த "டைம்கேம்ப்" சாப்ட்வேர், கையும் களவுமாக அந்த பெண்ணை காட்டிக் கொடுத்துவிட்டதால், அவரை வேலையிலிருந்தே நிறுவனம் நீக்கிவிட்டதாம்.

"டைம்கேப்"

அதுமட்டுமல்ல, வேலை நேரத்தை வீணடித்ததற்காக ரூ.3 லட்சம் அபராதமும் அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.. அந்த நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் சம்பந்தமான வேலையை அந்த பெண் பார்த்து வந்தததுடன், 50 மணி நேரம் வேலை செய்ததாகவும் கணக்கு காட்டியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான நேரம் வேலை செய்யவில்லையாம்.. வேலைநேரத்தின் போது வேலை செய்யாமல் விலகியிருப்பதை, "டைம்கேம்ப்" கண்டறிந்துள்ளது.. இதை அடிப்படையாக வைத்து அவரை வேலையில் இருந்து நீக்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது "டைம்கேப்" நினைத்துதான் பலர் கதிகலங்கி போயுள்ளார்களாம்..!!!

English summary
Super time camp software and woman caught wasting time during work from home fired asked to pay rs 3 lakh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X