இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்! உலக நாடுகளின் கருத்துக்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது. இந்த போரில் குற்றங்கள் நடந்திருப்பதாகவும், இதற்கு நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த ஆணை குறித்து சர்வதேச நாடுகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

போர் என்றால் இரு நாட்டின் ராணுவத்திற்கு இடையேதான் நடக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பொதுமக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி நெதன்யாகு கடந்த ஆண்டு இந்த போரை தொடங்கினார். போரில் ஹமாஸ் தலைவர்கள் கணிசமான அளவு கொல்லப்பட்டாலும், இதுவரை 45,000க்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போரை நிறுத்த வேண்டும் என்று ஐநா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

international court of justice israel palestine

தீர்மானத்திற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனாலும் இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை. மறுபுறும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவும், சீனாவும் கேள்வி எழுப்பும்போது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விஷயத்தை நீர்த்துபோக செய்து விடுகிறது. எனவே வேறு வழியே இல்லாமல்தான் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து உலக நாடுகளின் கருத்தை பார்ப்போம்.

இஸ்ரேல்: இஸ்ரேல் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. யூத இனத்திற்கு எதிரான குற்றச்சாட்டாக இதை பார்ப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். அவரது அலுவலகம், "சர்வதேச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு அவமதிப்புக்கு உரியது. அந்த வகையில் நாங்கள் இதை நிராகரிக்கிறோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்" என்று கூறியுள்ளது.

ஹமாஸ்: ஹமாஸ் தரப்பில் இந்த உத்தரவு வரவேற்கப்பட்டிருக்கிறது. நீதிக்கான முக்கியமான நகர்வாக சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் பார்க்கிறோம் என ஹமாஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். அதேபோல உலக நாடுகள் இந்த உத்தரவை வரவேற்காவிட்டால் அது நீர்த்துபோக செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா மக்கள்: "நாங்கள் இந்த உத்தரவை சந்தேகத்துடன் அணுகுகிறோம். இப்போதும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. விரைவில் இந்த உத்தரவு மாறுதலுக்குகூட உட்படலாம். அதை அமெரிக்காவே செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறுவதாக அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜோர்டன்: "சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு நிச்சயமாக அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். பாலஸ்தீன மக்கள் விரைவில் நீதி பெறுவார்கள்" என்று ஜோர்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐய்மன் சஃபாதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா: "இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கைது ஆணை, மூர்கத்தனமானது" என்று ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், "இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அவர்களுடன் நிற்போம். இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது ஏற்கெனவே தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கனடா: "சர்வதேச சட்டங்களை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். கனடா அதை சரியாக செய்யும்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெளிவாக கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா: "போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக நீதியை நோக்கி எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது. எனவே சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாங்கள் வரவேற்பளிக்கிறோம்" என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியன்
நெதர்லாந்து
பிரான்ஸ்
நார்வே
அயர்லாந்து
இத்தாலி
ஸ்வீடன்
பிரிட்டன்
பெல்ஜியம்
ஆஸ்திரியா
சுவிட்சர்லாந்து
துருக்கி

உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டிருப்பதாகவும், அதன் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளன. மறுபுறம் ஹங்கேரி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் இந்த உத்தரவை எதிர்த்துள்ளன. இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+