நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி.. அமெரிக்க தாக்குதலின் போது குண்டுவெடித்து மரணம்.. டிரம்ப் அறிவிப்பு!

சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கதையை முடித்துவிட்டோம்....திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்.!

    நியூயார்க்: சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.

    சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது படையில் பாதியை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதன்பின் சிரியாவில் குர்து படைகளுக்கும் துருக்கி படைக்கும் இடையில் சண்டை நடந்தது. இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வேகமாக வளரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக சிரியாவில் மறைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி சிஐஏ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்.

    17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்!17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்!

    யார் இவர்

    யார் இவர்

    ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக 2010ல் அபு பக்கர் அல் பக்தாதி பதவி ஏற்றுக்கொண்டார். 2013ல் இந்த அமைப்பு அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அந்த அமைப்பின் பெயர் ஐஎஸ்ஐஎஸ் - இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா என்று மாற்றப்பட்டது.

    மோசம்

    மோசம்

    இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் அமெரிக்க படைகளின் கைகளில் சிக்காமல் இருந்தான். அமெரிக்க படைகள் சிரியா போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே வீழ்த்தியது. ஆனாலும் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் சிக்கவில்லை.

    திட்டம் போட்டார்

    திட்டம் போட்டார்

    இவர்தான் ஐஎஸ் அமைப்பை உலகம் முழுக்க கட்டுப்படுத்தி வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அபு பக்கர் அல் பக்தாதி ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டார். அதுதான் அவரின் கடைசி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அபு பக்கர் அல் பக்தாதி எங்கே சென்றார், எங்கு திட்டங்கள் போடுகிறார் என்று தகவலும் வெளியாகவில்லை.

    காயம் அடைந்தார்

    காயம் அடைந்தார்

    2017 மற்றும் 2018ல் அமெரிக்க படை நடத்திய தாக்குதல் ஒன்றில் அபு பக்கர் அல் பக்தாதி காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. இவர் பலமுறை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 2018 ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட தொடங்கியதால், அபு பக்கர் அல் பக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்பது உறுதியானது.

    பலியாகி விட்டாரா?

    பலியாகி விட்டாரா?

    இந்த நிலையில்தான் சிரியாவில் நடந்த அமெரிக்க படையின் தாக்குதலில் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டு விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.

    என்ன நடந்தது?

    இதற்காக டிரம்ப் காலையில், மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துவிட்டது, என்று டிவிட் செய்தார். சிஐஏ அமைப்பின் உதவியுடன் அபு பக்கர் அல் பக்தாதி கண்டுபிடிக்கப்பட்டார் என்று தற்போது உறுதியாகி உள்ளது.

    எப்படி மரணம்

    எப்படி மரணம்

    அமெரிக்க படை அவரின் இருப்பிடத்தில் தாக்குதல் நடத்த சென்ற போது தீவிரவாதி அபு பக்கர் தன்னிடம் இருந்து குண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலில் செய்யப்பட்ட சோதனை மூலம் அவர், அபு பக்கர் என்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    English summary
    The leader of ISIS, Abu Bakr al-Baghdadi being killed by US military action - Reports. Trump tweets something big happened.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X