டிரம்பின் 'ஸ்கெட்ச்' ரஷ்யாவுக்கு கிடையாது.. உக்ரைனுக்குதான்! இன்னையோட எல்லாம் முடிந்தது!
நியூயார்க்: போருக்கு உதவி செய்ததற்கு பதிலீடாக, உக்ரைனில் உள்ள கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இன்று ஜெலன்ஸ்கி-டிரம்ப் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இப்படி நடந்தால், உக்ரைனின் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டி எடுக்கப்படும். சொல்லப்போனால் போருக்கு காரணமே உக்ரைனை சுரண்டுவதாகத்தான் இருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த போர் உருவாக காரணம் அமெரிக்காதான். உக்ரைன் அது பாட்டுக்கு தனியாக இருந்தது. ஆனால், "வா வந்து நேட்டோவுல இணைஞ்சுக்கோ" என அமெரிக்கா ஆசை வார்த்தை கூற.. உக்ரைன் குஷியாகிவிட்டது. நேட்டோ அமைப்பில் இணையும் நாடுகளில், ஏற்கெனவே இணைந்த நாடுகளின் ராணுவம் பாதுகாப்புக்கு நிற்கும். அதாவது பாகிஸ்தான் நேட்டோவில் இணைகிறது எனில்.. பாக். எல்லையில் அமெரிக்க ராணுவம் நிறுத்தப்படும். ஏனெனில் அமெரிக்காதான் ஏற்கெனவே அதில் உறுப்பினராக இருக்கிறதே!
இதே கதைதான் ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான பஞ்சாயத்துக்கு காரணம். பாக். எல்லையில் அமெரிக்க ராணுவம் நின்றால் நமக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் சீன ராணுவம் நின்றால்? நமக்கு சீனா எப்படியோ, அதுபோல ரஷ்யாவுக்கு அமெரிக்கா.
உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால், அமெரிக்க ராணுவம் எல்லைக்கு வந்துவிடும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே, நேட்டோவுக்கு போக வேண்டாம். பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என புதின் எவ்வளவோ சொல்லி பார்த்தார் வேலைக்கு ஆகவில்லை. எனவே வேறு வழியில்லாமல் கடந்த 2022ம் ஆண்டு போரை தொடங்கினார்.
உக்ரைன் சிறிய நாடு.. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவ பலம் கிடையாது. எனவே அமெரிக்காவிடம் போய் நின்றது. அமெரிக்காவும் அள்ளி அள்ளி கொடுத்தது. ஆனால் சும்மா கொடுக்குமா? கொடுத்ததை எல்லாம் இப்போது திரும்ப கேட்கிறது.
'அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்?' என்று உக்ரைன் கைவிரிக்க.. கவலைப்படாதே ஜெலன்ஸ்கி, நாட்டில் உள்ள இயற்கை வளங்களில் பாதியை எங்களுக்கு வித்துடு என்று டிரம்ப் ஆலோசனை சொல்லியுள்ளார். இப்படியாக இன்று அமெரிக்காவுக்கும் - உக்ரைனுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதற்காக இன்று வெள்ளை மாளிகைக்கு வருகிறார் ஜெலன்ஸ்கி.
சரி உக்ரைனில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? உக்ரைனில் இல்லாத வளமே கிடையாது என்று சொல்லலாம். இன்று மின்சார வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அத்தனை கனிமங்களும் அங்குதான் குவிந்து இருக்கிறது. உக்ரைனை தவிர சீனாவிடம் இந்த கனிமங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, சீனாவுக்கு தண்ணி காட்ட உக்ரைன் வளங்களுக்கு வலை விரித்துள்ளது அமெரிக்கா.
இரும்பு, எஃகு, டைட்டேனியம், யுரேனியம், மெக்னீஸ், கிராஃபைட் , இயற்கை எரிவாயு ஆகியவை உக்ரைனின் முக்கிய வளங்கள். இதில் யுரேனியம் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும், அணு உலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-உக்ரைன் இடையேயான ஒப்பந்தம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை பகிருங்கள் வாசகர்களே!
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications