பாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது?
காஷ்மீர் பிரச்சனை என்பது இரண்டு நாட்டு பிரச்சனை என்று பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஆகிய நாடுகள் ஐநாவில் தெரிவித்துள்ளது.
Recommended Video
நியூயார்க்: காஷ்மீர் பிரச்சனை என்பது இரண்டு நாட்டு பிரச்சனை என்று பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஆகிய நாடுகள் ஐநாவில் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளும் இதை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை தற்போது சர்வதேச அரங்கத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. காஷ்மீரில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய 15 நாடுகள் இது தொடர்பாக ஆலோசித்து உள்ளது.

சீனா
முதலில் இருந்து காஷ்மீர் பிரச்சனையில் சீனா பாகிஸ்தான் பக்கம்தான் நிற்கிறது. இந்தியாவின் முடிவால் காஷ்மீரில் உள்ள சீனாவின் எல்லைக்கும் ஆபத்து வந்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் ஒன்றாக இருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனையில் சீனா இந்தியாவிற்கு எதிராக பேசி உள்ளது.

ஆனால் என்ன
முதலில் காஷ்மீரில் இந்தியா எடுத்த நடவடிக்கை உள்நாட்டு பிரச்சனைதான் என்று அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த சில அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது அந்த நாடுகளின் ஐநா பிரதிநிதிகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதன்படி காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்குமான பிரச்சனை என்று கூறியுள்ளனர்.

எல்லாம் போச்சு
பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இது இரண்டு நாட்டு பிரச்சனை என்றுள்ளது. மலேசியாவும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காஷ்மீர் விவாகரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையாக இருக்கும் வரை சிக்கல் இல்லை. ஆனால் இப்போது இது உலக பிரச்சனையாகி உள்ளது.
யார் கையில்
தற்போது காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடந்து முடிந்துள்ளது. 5 நிரந்தர உறுப்பினர்கள், 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டது. இந்த பெரும்பாலான உறுப்பு நாடுகளும் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications