நேட்டோ உடைகிறது.. கிரீன்லாந்து உள்ளே புகுந்து.. தாக்க டிரம்ப் திட்டம்.. ஐரோப்பா முதுகில் குத்திய US!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது பேச்சுவார்த்தை மட்டும் தீர்வாக அமையாது, இதற்காக ராணுவத்தையும் பயன்படுத்தலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராணுவப் பயன்பாடு உட்பட பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருகிறார்.
டிரம்பின் கிரீன்லாந்து மீதான ஆசைகளுக்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் கிரீன்லாந்து உள்ளே சென்று தாக்கலாமா என்று திட்டமிட்டு வருகிறாராம். ஐரோப்பிய தலைவர்கள் டென்மார்க்கிற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே இந்த அமெரிக்க அறிவிப்பு வந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு தேவை என்று டிரம்ப் வாதாடி வருகிறார்.அதே சமயம் எந்தவிதமான அமெரிக்க தாக்குதலும் நேட்டோ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்தார். உள்ளே படைகளை எடுத்துச்சென்று கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் அது மிகப்பெரிய போராக உருவெடுக்கும். ஐரோப்பா - அமெரிக்கா சண்டையாக மாறும்.
நேட்டோ உடையும்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள ஒரு சுயாட்சிப் பிரதேசம். வேறு நாட்டின் ஆதிக்கம் வேண்டாம் என்பதை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இந்த தீவை தன்னுடன் இணைக்க முயன்றால், விருப்பமில்லாத கிரீன்லாந்து மக்களை இராணுவ பலத்தால் கட்டுப்படுத்த நேரிடும். இது நீண்டகால அடிமை ஆட்சியையும், சர்வாதிகாரத்தை சூழலையும் உருவாக்கும்.
இந்த யோசனைக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். வாஷிங்டனுக்கு நேரடி எச்சரிக்கையாக, "அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தேவை பற்றிப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது" என்றார். டென்மார்க் ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் இணைக்க அமெரிக்காவிற்கு சட்ட அடிப்படை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் நேட்டோ உறுப்பினர்கள் என்பதால், கூட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தால் ஏற்கனவே பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேட்டோ நாடு
ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு கிரீன்லாந்தில் விரிவான ராணுவ அணுகல் உண்டு என டென்மார்க் குறிப்பிட்டது. கிரீன்லாந்து படையெடுக்கப்பட்டால், டென்மார்க் நேட்டோவின் ஐந்தாம் பிரிவை (Article 5) பயன்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியிருப்பது, நிலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இப்பிரிவின்படி, ஒரு நேட்டோ உறுப்பினர் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பினர்கள் மீதும் நிகழும் தாக்குதலாகவே கருதப்படும்.
கூட்டணியை ஆதரிப்பதா இல்லையா என்பதை ஒவ்வொரு நேட்டோ நாடும் பகிரங்கமாகத் தேர்வு செய்ய இது கட்டாயமாக்கும். ஐந்தாம் பிரிவுக்கு ஆதரவளிக்கத் தவறினால், நேட்டோ அமைப்பே சிதையலாம். அதாவது ஒரு நேட்டோவை தாக்கினால் மற்ற எல்லா நேட்டோ நாடும் உதவிக்கு வரும். ஆனால் தாக்குதல் நடத்துவதே நேட்டோ நாடு என்றால் என்ன ஆகும்? மொத்தமாக நேட்டோ அமைப்பே சிதைந்து போகும்.
இந்த விவகாரத்தின் விளைவுகள் மோசமானதாக கடுமையானதாக இருக்கும். கிரீன்லாந்தை இணைப்பது நேட்டோ ஒற்றுமையைச் சிதைக்கும். இதன் மூலம் ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்தி நேட்டோவிற்கு சவால் விடும். நேட்டோ உடைந்தால்.. நேட்டோவில் இருக்கும் நாடுகளை தாக்க ரஷ்யா அஞ்சாது.
அத்துடன், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே பெரிய வர்த்தகப் போரையும் தொடங்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து பதிலடி கொடுக்கலாம். இது அமெரிக்க வணிக நலன்களையும் முதலீட்டாளர்களையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications